ஆப்நகரம்

Vikram lander: விக்ரம் லேண்டரை மீண்டும் ‘கண்டுபிடித்த’ தமிழர்!

சந்திராயன் 2 விண்கலத்தோடு விண்ணில் செலுத்தப்பட்ட விக்ரம் லேண்டரை கண்டுபிடிக்க மதுரையை சேர்ந்த பொறியாளர் சண்முக சுப்பிரமணியன்தான் உதவியாக இருந்துள்ளார்.

Samayam Tamil 3 Dec 2019, 11:28 am
நிலவின் தென் துருவப் பகுதியை ஆய்வு செய்யச் சந்திரயான் 2 விண்கலத்தை இஸ்ரோ, கடந்த ஜூலை 22ஆம் தேதி அனுப்பி வைத்தது. சந்திரயான் 2 விண்கலத்தில் விக்ரம் லேண்டர், ஆர்பிட்டர், ரோவர் உள்ளிட்டவை நிரப்பப்பட்டிருந்தது.
Samayam Tamil Untitled (15)


Vikram Lander: விக்ரம் லேண்டர் கிடைச்சிருச்சு!

இஸ்ரோ திட்டமிட்டிருந்தபடி, சந்திரயான் 2 விண்கலத்திலிருந்து ஆர்பிட்டர் தனியாக பிரிந்து நிலவை சுற்றிவரத் தொடங்கியது. தொடர்ந்து விக்ரம் லேண்டரும் நிலவில் தரையிறங்கித் தனது பயணத்தை தொடங்கியது. அதன்படி, செப். 7ஆம் தேதி தரையிறங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் விக்ரம் லேண்டருடனான தொடர்பு கிடைக்காமல் போனது.

பின் லேண்டர் குறித்த எந்த தகவலும் இஸ்ரோவுக்கு கிடைக்கவில்லை. பல்வேறு முயற்சிகளுக்குப்பின், விக்ரம் லேண்டரை கண்டுபிடிக்க முடியவில்லை என இஸ்ரோ அறிவித்தது. அதன்பின் இஸ்ரோ, நாசாவுடன் இணைந்து விக்ரம் லேண்டரை தேடத் தொடங்கியது.

இதற்கிடையில் கடந்த செப். 26ஆம் தேதி முதல் சுப்பிரமணியன் விக்ரம் லேண்டரை தேடத் தொடங்கினார். நாசா வெளியிட்ட புகைப்படங்களை வைத்துத் சுப்பிரமணியன் தேடுதலை நடத்தியுள்ளார். தேடுதலில் தான் கண்டறிந்த விஷயங்களைச் சுப்பிரமணியன் நாசாவிடம் பகிர்ந்துள்ளார்.



சுப்பிரமணியனின் தகவலைப் பார்த்த நாசா, விக்ரம் லேண்டர் பாகங்களை நிலவில் கண்டறிந்துள்ளது. சந்திரயான் 2 விண்கலம் சுமந்து சென்ற விக்ரம் லேண்டரின் இருப்பிடத்தைக் கண்டுபிடிக்க மதுரை பொறியாளர் சண்முக சுப்ரமணியன் கொடுத்த தகவலே காரணம் என்றும் நாசா அறிவித்தது.

விண்ணில் வெற்றிகரமாக பாய்ந்தது பிஎஸ்எல்வி சி-47

சுப்பிரமணியன் கண்டறிந்த பாகங்களுக்கு S என்ற அடையாளமும் வழங்கப்பட்டுள்ளது. விக்ரம் லேண்டரை கண்டுபிடிக்க உதவியாகயிருந்த சுப்பிரமணியனுக்கு நாசா நன்றி தெவித்து தனிப்பட்ட முறையில் மின்னஞ்சல் ஒன்றையும் அனுப்பியுள்ளது. சுப்பிரமணியன் சென்னை தரமணியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். இவர் சொந்த ஊர் மதுரை.


இதுகுறித்து நாசா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், நாசாவின் லுனார் ரிகனைஸ்ஸான்ஸ் ஆர்பிட்டர் மூலம் விக்ரம் லேண்டர் தரையிறக்க திட்டமிடப்பட்ட இடத்தின் புகைப்படத்தைச் செப்டம்பர் 26ஆம் தேதி வெளியிட்டிருந்தோம். விக்ரம் லேண்டரின் உடைந்த பாகங்களைக் கண்டறிவதற்காகப் பல ஆய்வாளர்கள் அதனை பதிவிறக்கம் செய்து தேடியதாகவும், அதில் சண்முக சுப்ரமணியன் என்ற இந்திய பொறியாளர் விக்ரம் லேண்டரின் உடைந்த பாகங்கள் இருக்கும் இடம் குறித்து நாசாவிற்கு தெரியப்படுத்தினார்.

அடுத்த செய்தி