ஆப்நகரம்

தஞ்சையில் தேர் திருவிழா: மே 5-ல் உள்ளூர் விடுமுறை

பெரிய கோயில் சித்திரை தேர் திருவிழாவை முன்னிட்டு தஞ்சையில் வருகிற மே 5-ம் தேதியன்று உள்ளூர் விடுமுறை விடப்படும் என அம் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

TNN 28 Apr 2017, 6:14 pm
தஞ்சை: பெரிய கோயில் சித்திரை தேர் திருவிழாவை முன்னிட்டு தஞ்சையில் வருகிற மே 5-ம் தேதியன்று உள்ளூர் விடுமுறை விடப்படும் என அம் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
Samayam Tamil chariot festival district collector announces local holiday for thanjavur on may 5th
தஞ்சையில் தேர் திருவிழா: மே 5-ல் உள்ளூர் விடுமுறை


தஞ்சாவூர் மாமன்னன் ராஜராஜசோழனால் கட்டப்பட்ட தஞ்சை பெரியகோவில் உலக பிரசித்தி பெற்றது. உலக பாரம்பரிய சின்னமாகவும் விளங்குகிறது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் சித்திரை திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டிற்கான சித்திரை திருவிழா, கொடியேற்றத்துடன் அண்மையில் தொடங்கியது.

சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற மே மாதம் 5-ம் தேதி நடைபெறவுள்ளது. அன்று காலை 5.30 மணிக்கு மேல் பெரியகோவிலில் இருந்து விநாயகர், சுப்பிரமணியர், நீலோத்பலாம்பாள், சண்டிகேஸ்வரர், தியாகராஜர் - கமலாம்பாள் ஆகிய பஞ்சமூர்த்திகள் ஒன்றன்பின் ஒன்றாக புறப்பட்டு தேர் மண்டபத்தை வந்தடைவார்கள். அங்கு தியாகராஜர் - கமலாம்பாள் மட்டும் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்கள். அதைத்தொடர்ந்து காலை 6 மணிக்கு மேல் 6.30 மணிக்குள் தேர் வடம் பிடித்து இழுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தஞ்சை பெரிய கோயில் சித்திரைத் தேர் திருவிழாவை வருகிற மே 5-ம் தேதி தஞ்சையில் உள்ளூர் விடுமுறை விடப்படும் என அம் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
Chariot Festival: District collector announces Local holiday for thanjavur on May 5th

அடுத்த செய்தி