ஆப்நகரம்

சென்னையில் 15 ஆயிரம் போலீஸ்... என்ன நடக்கும்...?

பாபர் மசூதி இடிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில் நாளை அதற்கான தீர்ப்பு வெளியாகும் எனத் தெரியவந்துள்ளது.

Samayam Tamil 9 Nov 2019, 12:48 am
அயோத்தியில் பாபர் மசூதி அமைக்கப்பட்டிருந்த இடத்தை, இந்து கடவுள் ராமர் பிறந்த இடம் என இந்து அமைப்புகள் கூறி வந்தன. இதையடுத்து, 1992 -ஆம் ஆண்டு டிசம்பர் 6 -ஆம் தேதி பாபர் மசூதி இடித்து தரை மட்டமாக்கப்பட்டது. இந்த மத வெறி தாக்குதலை முதலில் மத வெறியர்கள் தொடங்கினார்கள்.
Samayam Tamil tamil_nadu_police


இதன்பின், பாபர் மசூதி அமைந்திருந்த இடம் யாருக்குச் சொந்தம் என்பதில் இந்து அமைப்புகளுக்கும், இஸ்லாமிய அமைப்புகளுக்குமிடையே பெரிய பிரச்சனை ஏற்பட்டது.

அயோத்தி வழக்கில் நாளை தீர்ப்பு...நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு!!

இந்த விவகாரம் அலகாபாத் உயர் நீதிமன்றத்தைத் தொடர்ந்து இப்போது, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான 5 பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டது.

இவ்வழக்கை 40 நாள்கள் தொடர்ந்து விசாரித்து வந்த நீதிபதிகள் நாளை தீர்ப்பு வழங்க முடிவு செய்துள்ளனர். இறுதிக்கட்ட விசாரணைகள் நிறைவடைந்த நிலையில், வரும் 13-ஆம் தேதிக்குள் இந்த வழக்கில் தீர்ப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில், பாபர் மசூதி இடிக்கப்பட்டது தொடர்பான தீர்ப்பு நாளை காலை 10.30 மணியளவில் வெளியாகும் என நம்பத் தகுந்த வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. இதையடுத்து டெல்லி, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சுமார் 40 ஆயிரம் காவல்துறையினர் உத்திர பிரதேசத்தில் குவிக்கப்பட்டுள்ளனர்.

காங்கிரஸ்சூக்கு எஸ்பிஜி பாதுகாப்பு ரத்து, அயோத்தி வழக்கு நீதிபதிக்கு இசட் பிளஸ்!

அதே நேரத்தில், உத்திர பிரதேசத்தில் 8 தனியார் கல்லூரிகளைத் தற்காலிக சிறைச் சாலையாக அரசு மாற்றியுள்ளது. அதேபோல் தமிழ்நாட்டில் காவல்துறையினருக்கு அடுத்த மாதம் 10ஆம் தேதிவரை விடுமுறை அளிக்கப்படாது என உத்தரவு ஒன்றும் பிறப்பிக்கப்பட்டிருந்தது. இதன் அடுத்த கட்டமாக, இப்போது சென்னையில் சுமார் 15 ஆயிரம் காவலர்கள் பாதுகாப்புப் பணிக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.



மொத்தம் தமிழ்நாட்டில் ஒரு லட்சம் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளனர். பாபர் மசூதி தீர்ப்பால், தமிழ்நாட்டில் இன்று நடக்கவிருந்த காவலர் தேர்வு தேதிக் குறிப்பிடப்படாமல் மாற்றப்பட்டுள்ளது. இதன் காரணமாக தேர்வில் கலந்துக் கொள்ள வந்த இளைஞர்கள் பலர் விஷயம் தெரியாமல் ஆங்காங்கே அவதிப் பட்டுக் கொண்டிருக்கின்றனர்.

அடுத்த செய்தி