ஆப்நகரம்

ஹலோ... இது வெறும் தொடக்கம்தான் வெளுத்து வாங்கப்போகுது!!

ஹலோ இதுவரைக்கும் பெய்த மழை ஒன்றும் பெரிய விஷமில்லை. இனிதான் உண்மையான மழையைப் பார்க்கப் போகிறீர்கள் என்று வெதர்மேன் தனது பேஸ்புக் பதிவில் குறிப்பிட்டு இருக்கும் விஷயம் மக்களுக்கு எச்சரிக்கை விடுப்பதாக உள்ளது.

TOI Contributor 30 Oct 2017, 5:11 pm
ஹலோ இதுவரைக்கும் பெய்த மழை ஒன்றும் பெரிய விஷமில்லை. இனிதான் உண்மையான மழையைப் பார்க்கப் போகிறீர்கள் என்று வெதர்மேன் தனது பேஸ்புக் பதிவில் குறிப்பிட்டு இருக்கும் விஷயம் மக்களுக்கு எச்சரிக்கை விடுப்பதாக உள்ளது.
Samayam Tamil chennai and coastal tn rain update smashing spell on the way says weatherman
ஹலோ... இது வெறும் தொடக்கம்தான் வெளுத்து வாங்கப்போகுது!!


சென்னை உள்பட தமிழகம் முழுவதும் மழை வெளுத்து வாங்கப் போகிறது என்று இந்திய வானிலை ஆய்வு மையமும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையமும் அதையேதான் குறிப்பிட்டுள்ளது. வெதர்மேன் பிரதீப் பதிவிட்டுள்ள பேஸ்புக் பதிவில், ''காரைக்கால், திருவாரூர், கடலூரின் சிதம்பரம், நாகப்பட்டினம் போன்ற இடங்களில் மழை பெய்து வருகிறது. புதுச்சேரியிலும் மழை பெய்யும்.

ஈசிஆரில் இன்று மாலை பலத்த மழை பெய்யும். அதற்கான அறிகுறிகளாக மேகக் கூட்டங்கள் வந்து கொண்டுள்ளன. இது வெறும் துவக்கம் தான். தமிழகத்திற்கு இன்னும் வரும் வாரங்களில் அதிக மழை இருக்கும். இந்த முறை மழை தொடர்பான முன்னறிவிப்பை சரியாக கொடுக்க நாசாவே தனது தலையை முட்டி மோதிக் கொள்ள வேண்டும். அந்தளவிற்கு மழை குறித்து கணிக்க முடியாத சூழல் உள்ளது.
OMR, ECR and rest of South #Chennai seeing intense spell of #Chennairains. More thunderstorms moving in from the sea towards rest of city pic.twitter.com/ZCsZVR8WAd — Chennairains (@ChennaiRains) October 30, 2017 டெல்டா பகுதிகளில் கடுமையான மழை பெய்யும். நாகப்பட்டினத்தில் உள்ள கொள்ளிடத்தில் 200 மி.மீ., மழை பதிவாகியுள்ளது. திருச்சி, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி என்று மழை அப்படியே மற்ற மாவட்டங்களும் பரவும். புரளிகளும் சுற்றி வரும். இன்னும் இரண்டு மூன்று நாட்கள் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்'' என்று தெரிவித்துள்ளார்.

Chennai and coastal TN rain update - Smashing spell on the way says weatherman

அடுத்த செய்தி