ஆப்நகரம்

அனுமதியின்றி அமைக்கப்படுமா விளம்பர பதாகை? அச்சகத்திற்கு ஆப்பு.! உடனே சீல். - சென்னை மாநகராட்சி

சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அனுமதி பெறாமல் விளம்பரப் பதாகைகள் மற்றும் விளம்பரத் தட்டிகள் வைப்பவர்களுக்கு அச்சடிக்கும் பணியை மேற்கொள்ளும் அச்சகத்தின் உரிமம் ரத்து செய்யப்பட்டு, மேலும் அச்சகம் மூடி சீல் வைக்கப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.

Samayam Tamil 10 Sep 2019, 2:26 pm
சென்னைக்கு உட்பட பகுதிகளில் அனுமதியின்றி பதாகைகள் மற்றும் தட்டிகள் மூலமாக விளம்பரம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் இரு தினங்களுக்கு முன் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகா ஷ் ஒரு உத்தரவை பிறப்பித்தார். அதில், சென்னை பெருநகர் சாலைகளில் உள்ள மரங்களை விளம்பரம் செய்யும் நோக்கில் ஆக்கிரமித்தால் 25 ஆயிரம் ருபாய் அபராதம் மற்றும் 3 வருட சிறை தண்டனையும் வழங்கப்படும் என அந்த அறிவிப்பில் கூறப்பட்டது.
Samayam Tamil 5

மரங்களில் உள்ள பதாகைகள் மற்றும் தட்டிகளை 10 நாட்களுக்குள் அகற்ற வேண்டும் என தனியார் அமைப்புகளுக்கு எச்சரிக்கை விடப்பட்டது. இந்நிலையில் முறையான அனுமதி பெறாமல் சென்னைக்கு உட்பட்ட எல்லைக்குள் விளம்பர பதாகைகள் இருந்தால் அந்த விளம்பரத்தை அச்சிட்ட நிறுவனத்தின் உரிமம் பறிக்கப்பட்டு காலவரையற்ற சீல் வைக்கப்படும் என சென்னை மாநகராட்சி இந்த புதிய உத்தரவை தனியார் அமைப்புகளுக்கு பிறப்பித்துள்ளது.

இந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது என்னவென்றால், சென்னை மாநகராட்சி முனிசிபல் சட்டம் 1919 பிரிவு எண் 326 படி ஆணையாளர் மற்றும் சென்னை மாநகராட்சி அவர்களின் உரிய அனுமதி பெற்று விளம்பர பதாகைகள் மற்றும் விளம்பர தட்டிகளை அமைக்கப்பட வேண்டும். அதன் அடிப்படையில் விளம்பரங்கள் அச்சிடும்போது அவ்விளம்பரப் பதாகைகள் கீழ் அனுமதி எண், அனுமதிக்கப்பட்ட நாள், அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கை, அளவின் விவரம், அச்சகத்தின் பெயர் ஆகியவற்றை அனைத்து அச்சகங்களும் முறையாக கடைபிடிக்க வேண்டும்.
மாநகராட்சி நிர்வாகம் மற்றும் நீதிமன்ற அறிவுரைகளை மீறி விளம்பரங்கள் அமைக்கப்பட்டால் மாநகராட்சி முனிசிபல் சட்டம் 1919 பிரிவு என் 287 கீழ் அச்சகத்தின் உரிமம் ரத்து செய்யப்படுவதுடன், அச்சகம் மூடி சீல் வைக்கப்படும் என ஆணையாளர் கோ.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி