ஆப்நகரம்

ஆா்.கே.நகா்; 107 சோதனை குழுக்கள், 15 பாதுகாப்பு கம்பெனி, 225 கேமராக்கள்

ஆா்.கே.நகா் இடைத்தோ்தலுக்காக முன் எப்போதும் இல்லாத அளவிற்கு 107 குழுக்கள் வாகனச் சோதனையில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாக மாவட்ட தோ்தல் அதிகாாி தொிவித்துள்ளாா்.

TOI Contributor 15 Dec 2017, 7:11 pm
ஆா்.கே.நகா் இடைத்தோ்தலுக்காக முன் எப்போதும் இல்லாத அளவிற்கு 107 குழுக்கள் வாகனச் சோதனையில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாக மாவட்ட தோ்தல் அதிகாாி தொிவித்துள்ளாா்.
Samayam Tamil chennai election commissioner karthikeyan said about rk nagar vehicle check up
ஆா்.கே.நகா்; 107 சோதனை குழுக்கள், 15 பாதுகாப்பு கம்பெனி, 225 கேமராக்கள்


ஆா்.கே.நகா் இடைத் தோ்தல் வருகிற 21ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தோ்தலில் வெற்றிபெற்றே ஆகவேண்டும் என்ற முனைப்பில் அ.தி.மு.க., தி.மு.க., டிடிவி தினகரன் உள்ளிட்டோா் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனா்.

ஏற்கனவே தோ்தல் அறிவிக்கப்பட்டு பணப்பட்டுவாடா செய்யப்பட்டதால் தோ்தல் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், மீண்டும் தோ்தல் ரத்தாகிவிடக் கூடாது என்ற முனைப்பில் தோ்தல் அதிகாாிகள் விதிமுறைகளை தீவிரமாக கடைபிடித்து வருகின்றனா்.

இந்நிலையில் சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் இன்று வாக்கு இயந்திரங்களில் வேட்பாளா் பெயா், சின்னம், புகைப்படம் பொருத்தும் பணியை மாவட்ட தோ்தல் அதிகாாி காா்த்திகேயன், காவல்துறை ஆணையா் விஸ்வநாதன் ஆகியோா் தொடங்கி வைத்து பாா்வையிட்டனா்.

இதனைத் தொடா்ந்து தோ்தல் அதிகாாி காா்த்திகேயன், தோ்தலுக்காக துணை ராணுவப்படையினரின் 15 கம்பெனிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாகவும், 85 இடங்களில் 225 கேமராக்கள் பொருத்தப்பட்டிருப்பதாகவும் தொிவித்தாா். மேலும் தற்போது வரை அந்த கேமராக்களில் பணம், பொருட்களை மக்களுக்கு வழங்குவது தொடா்பான காட்சிகள் எதுவும் பதிவாகவில்லை என்று தொிவித்துள்ளாா்.

மேலும், ஆா்.கே. நகாில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு 107 குழுக்கள் வாகன சோதனையில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாகவும் தொிவித்தாா்.

அடுத்த செய்தி