ஆப்நகரம்

உள்ளாட்சி தேர்தல் தேதி ரத்து: தேர்தல் ஆணையம் இன்று மேல்முறையீடு?

தமிழக உள்ளாட்சி தேர்தல் அட்டவனையை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ள நிலையில், இதனை எதிர்த்து தமிழக தேர்தல் ஆணையம் மேல்முறையீடு செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

TNN 5 Oct 2016, 8:09 am
சென்னை: தமிழக உள்ளாட்சி தேர்தல் அட்டவனையை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ள நிலையில், இதனை எதிர்த்து தமிழக தேர்தல் ஆணையம் மேல்முறையீடு செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Samayam Tamil chennai hc cancels local body election date ec to challenge today
உள்ளாட்சி தேர்தல் தேதி ரத்து: தேர்தல் ஆணையம் இன்று மேல்முறையீடு?


தமிழக உள்ளாட்சி தேர்தல் #LocalBodyElections அறிவிப்பு வெளியிடப்பட்ட நாள் முதலே அதில் சர்ச்சைகள் நிலவின. இதனையடுத்து, உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலல் குறித்த இந்த அறிவிப்பில், பழங்குடியின மக்கள் தொகைக்கு ஏற்ப, இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை. இது பஞ்சாயத்து ராஜ் மற்றும் அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது என்பன உள்ளிட்ட பல காரணங்களால் உள்ளாட்சி தேர்தல் அட்டவனையை ரத்து செய்ய கோரி திமுக அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார்.

இந்த அமனு மீதான விசாரணை நடத்திய சென்னை உயர் நீதிமன்றம், உள்ளாட்சி தொடர்பான 3 அரசாணைகளை ரத்து செய்ததுடன், புதிய அறிவிப்பு ஆணை வெளியிட்டு டிசம்பர் 31-ம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டது.

இந்நிலையில், இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக தேர்தல் ஆணையம் சார்பில் இன்று மேல்முறையீடு செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வரவுள்ளதாகவும் தெரிகிறது.

முன்னதாக, நீதிமன்ற உத்தரவு இன்னமும் கைக்கு வரவில்லை. உத்தரவு கிடைத்ததும் அதை படித்து பார்த்து, அதில் என்ன கூறப்பட்டுள்ளது என்பதை அறிய வேண்டும். அதன் பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும் என தமிழக தேர்தல் ஆணையர் சீத்தாராமன் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Chennai HC cancels local body election date: EC to challenge today? #LocalBodyElection #ElectionCommision

அடுத்த செய்தி