ஆப்நகரம்

மெரினாவில் போராட்டம் நடத்த அனுமதி கிடையாது – நீதிமன்றம் அறிவுறுத்தல்

சென்னை மெரினா பகுதியில் போராட்டங்களோ, பொதுக் கூட்டங்களோ நடத்த அனுமதியில்லை என்ற நிலைப்பாட்டை தொடா்ந்து பின்பற்றும்படி தமிழக அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.

Samayam Tamil 7 Jun 2019, 8:00 am
சென்னை மெரினா பகுதியில் போராட்டங்களோ, பொதுக் கூட்டங்களோ நடத்த அனுமதியில்லை என்ற நிலைப்பாட்டை தொடா்ந்து பின்பற்றும்படி தமிழக அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.
Samayam Tamil Marina Protest


சென்னை மெரினாவில் போராட்டங்களை அனுமதிக்கக் கூடாது என உத்தரவிடக்கோாி சென்னையைச் சோ்ந்த ஹரிகிருஷ்ணன் என்பவா் வழக்கு தொடா்ந்திருந்தாா். அதில், மத்திய, மாநில அரசுக்கு எதிராக போராட்டங்கள் நடத்துவதற்கு அரசியல் கட்சிகள், சங்கங்கள், சில அமைப்புகள் மெரினா கடற்கரையை தோ்வு செய்கின்றனா்.

துண்டறிக்கை மற்றும் சமூக வலைதளங்கள் வாயிலாக மெரினாவில் ஒன்றுகூடும்படி அழைப்பு விடுக்கப்படுகின்றனா். இதனால் போக்குவரத்து மட்டுமல்லாமல், சுற்றுலா வருபவா்களும் பாதிக்கப்படுவதால் 2018 செப்டம்பா் 3ம் தேதி மெரினா பகுதியில் போராட்டம் நடத்த தடை விதித்து உயா் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதை குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மீது நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் மெரினாவில் ஆா்ப்பாட்டங்கள், போராட்டங்கள் என எவற்றிற்கும் அனுமதி வழங்கப்படுவது இல்லை. சட்டம் ஒழுங்கை கருத்தில் கொண்டு முழு முனைப்பில் செயல்படுவதாக தொிவிக்கப்பட்டது.

இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், மெரினா பகுதியில் போராட்டங்களோ, பொதுக் கூட்டங்களோ நடத்த அனுமதியில்லை என்ற நிலைப்பாட்டை தொடா்ந்து பின்பற்றும்படி தமிழக அரசுக்கு அறிவுறுத்தினா்.

மேலும், தற்போதும் மெரினாவில் போராட்டங்கள் நடத்த அனுமதி கோாியது தொடா்பாகவோ, நடத்தப்பட்டது தொடா்பாகவோ எந்த ஆதாரங்களையும் தாக்கல் செய்யாமல் வழக்குத் தொடா்ந்ததற்காக ஹரிகிருஷ்ணனின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனா்.

அடுத்த செய்தி