ஆப்நகரம்

ஜெ.பிறந்தநாள்: ஜல்லிக்கட்டு மாதிரியே சேவல் சண்டைக்கும் அனுமதி கொடுங்க...

சேவல் சண்டை நடத்த அனுமதி மறுத்த உத்தரவை ரத்து செய்து, சேவல் சண்டைக்கு அனுமதியும், காவல்துறை பாதுகாப்பும் வழங்க உத்தரவிட வேண்டும் எனக் கோரியுள்ளார்.

Samayam Tamil 11 Feb 2020, 8:30 am
முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு சேவல் சண்டை நடத்த அனுமதி மறுத்த காவல்துறை பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Samayam Tamil jeyalalitha


ஜல்லிக்கட்டு, சேவல் சண்டை போன்ற விளையாட்டுகளுக்குத் தடை விதித்து, 2014-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதன்பிறகு 3 ஆண்டுகளுக்கு ஜல்லிக்கட்டு நடத்தப்படவில்லை.

ஜல்லிக்கட்டு போராட்டம் 2017:

இந்நிலையில், சென்னையில் நடத்தப்பட்ட பெரும் மாணவர் புரட்சிக்குப் பிறகு தமிழக அரசு ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு அனுமதியளிக்கும் வகையில் சட்டம் நிறைவேற்றியது. எனினும் சேவல் சண்டைக்கு தடை நீடித்தது.



இந்நிலையில், முன்னாள் தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதாவின் 72-வது பிறந்தநாளை ஒட்டி, பிப்ரவரி 29 மற்றும் மார்ச் 1ஆம் தேதிகளில், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சில கிராமங்களில் சேவல் சண்டை நடத்த அனுமதி அளிக்கும்படி, திருவள்ளூரைச் சேர்ந்த சரவணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்பு மனுத் தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், கடந்த ஆண்டு சேவல் சண்டை நடத்த அனுமதி கோரிய வழக்கில் உயர் நீதிமன்றம், நிபந்தனைகளுடன் நடத்தலாம் என்று அனுமதி வழங்கியது.

மூளை இல்லாதவர்கள்: பிரசாந்த் கிஷோருடன் கைகோர்த்த திமுகவை விமர்சித்த எடப்பாடி

சேவல் சண்டை நடத்த அனுமதி மறுத்த உத்தரவை ரத்து செய்து, சேவல் சண்டைக்கு அனுமதியும், காவல்துறை பாதுகாப்பும் வழங்க உத்தரவிட வேண்டும் எனக் கோரியுள்ளார்.

கடந்த ஆண்டு கரூரில் அனுமதி பெற்று சேவல் சண்டை நடத்தப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

கரூர் சேவல் சண்டை காணொலி:

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சுப்பையா மற்றும் பொங்கியப்பன் அடங்கிய அமர்வு, பிப்ரவரி 17-ம் தேதிக்குள் மனுவுக்கு பதிலளிக்க திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கும், திருவாலங்காடு ஆய்வாளருக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி