ஆப்நகரம்

மேற்கு தொடர்ச்சி மலையில் அந்நிய மரங்கள்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

மேற்கு தொடர்ச்சி மலையில் அந்நிய மரங்களை அகற்றுவது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது.

Samayam Tamil 18 Apr 2022, 4:57 pm
மேற்கு தொடர்ச்சி மலையில் அந்நிய மரங்களை அகற்ற, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட நிதியை பயன்படுத்துவது தொடர்பாக விளக்கமளிக்க மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Samayam Tamil Madras HC


தமிழக வனப்பகுதிகளை ஆக்கிரமித்துள்ள அந்நிய நாட்டு மரங்களை அகற்றுவது தொடர்பான வழக்கு, நீதிபதிகள் பாரதிதாசன் மற்றும் சதீஷ்குமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, மேற்கு தொடர்ச்சி மலையில் வளர்ந்துள்ள அந்நிய நாட்டு மரங்களை அகற்றுவதற்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட நிதியை பயன்படுத்த முடியாது என மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளதாக தமிழக அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஜெயலலிதா பாணியில் எஸ்.பி.வேலுமணி: வழக்குகளிலிருந்து தப்பிக்க திட்டம்!
அதற்கு நீதிபதிகள், வேலையே செய்யாமல் வேலை உறுதி திட்டத்தின் கீழ் ஊதியம் வழங்குவதாக என வேதனை தெரிவித்ததுடன், மேற்கு தொடர்ச்சி மலையில் அன்னிய மரங்களை அகற்ற அந்த பகுதியை சேர்ந்த மலைவாழ் மக்களை பயன்படுத்தலாம் எனவும், வேலை உறுதி திட்டத்தின் நிதியை பயன்படுத்தும் போது அது அவர்களுக்கு வாழ்வாதாரமாக இருக்கும் எனவும் கருத்து தெரிவித்தனர்.
சிக்கப் போகும் அன்புமணி? பாஜக வைக்கும் செக் !
பின்னர், மேற்கு தொடர்ச்சி மலையில் மலை வாழ் மக்கள் மூலம் அன்னிய நாட்டு மரங்களை அகற்ற வேலை உறுதி திட்ட நிதியை பயன்படுத்தலாமா? என்பது குறித்து விளக்கம் அளிக்க மத்திய அரசுத்தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை நாளைக்கு தள்ளிவைத்தனர்.

அடுத்த செய்தி