ஆப்நகரம்

ஆன்லைன் பட்டாசு விற்பனை: தடையை நினைவுபடுத்திய உயர் நீதிமன்றம்!

ஆன்லைனில் பட்டாசு விற்பனை செய்யும் இணையதளங்களை முடக்குவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Samayam Tamil 25 Oct 2019, 3:22 pm
ஆன்லைன் மூலம் பட்டாசு விற்பனை செய்ய கடந்த ஆண்டு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் அது அமல்படுத்தப்படாமல் இருந்த நிலையில் வழக்கு தொடரப்பட்டது.
Samayam Tamil Untitled collage (3)


கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையின் ஆன்லைன் மூலம் பட்டாசு விற்கத் தடை விதிக்க கோரி சென்னையைச் சேர்ந்த பட்டாசு வியாபாரி ஷேக் அப்துல்லா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், ஆன் லைனில் பட்டாசுகள் விற்க தடை விதித்து உத்தரவிட்டது.

பட்டாசு எப்போது வெடிக்கலாம்: டைம் நோட் பண்ணிக்கோங்க!

இந்நிலையில் இந்த தடை உத்தரவை அமல்படுத்தவில்லை எனக் கூறி, வெடிபொருள் கட்டுப்பாட்டு துறை துணைத்தலைவர் சஞ்சனா ஷர்மா, சென்னை காவல் ஆணையர் விஸ்வநாதன், சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் ஆகியோருக்கு எதிராக ஷேக் அப்துல்லா நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், ஆன்லைன் பட்டாசு விற்பனைக்கு தடை விதித்து உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அனுப்பி வைத்தும், எந்த நடவடிக்கையும் எடுக்காத அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்க எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.

தற்போது தீபாவளி பண்டிகையை ஒட்டி சட்டவிரோதமாக ஆன்லைனில் பட்டாசு விற்பனைகள் துவங்கி விட்டதால், ஆன்லைன் மூலம் பட்டாசு விற்பனை செய்யும் இணையதளங்களை முடக்க சைபர் குற்றப் பிரிவு கூடுதல் டிஜிபிக்கு உத்தரவிட வேண்டும் எனவும் கோரியுள்ளார்.

தீபாவளி பண்டிகை: 24 மணி நேரமும் இணைப்பு பேருந்துகள் இயக்கம்

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஆதிகேசவலு, உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, ஆன்லைன் மூலம் பட்டாசு விற்பனை செய்யும் இணையதளங்களை முடக்க உத்தரவிட்டார். மேலும் ஆன்லைன் மூலம் பட்டாசுகள் விற்பது தண்டனை விதிக்கப்படும் என விளம்பரப்படுத்த நடவடிக்கை எடுக்கவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

அடுத்த செய்தி