ஆப்நகரம்

தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

தமிழகம் முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் தீயணைப்பு, ஆம்புலன்ஸ் வாகனங்கள் செல்ல தனி பாதை அமைப்பது குறித்த வழக்கில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

TNN 17 May 2017, 12:19 pm
சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் தீயணைப்பு, ஆம்புலன்ஸ் வாகனங்கள் செல்ல தனி பாதை அமைப்பது குறித்த வழக்கில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Samayam Tamil chennai high court orders national highway commission
தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு உயர் நீதிமன்றம் உத்தரவு


புதிய சாலைகளையும் புதிய மேம்பாலங்களையும் கட்டினால்கூட போக்குவரத்து நெரிசல் குறைந்தபாடில்லை. ஆம்புலன்ஸ் வாகனங்கள்கூட போக்குவரத்து நெரிசலில் இருந்து தப்பி,வேகமாக செல்ல முடிவதில்லை. இதேபோல அவசரமாக செல்ல வேண்டிய தீயணைப்பு வாகனங்கள் குறிப்பிட்ட நேரத்துக்கு போக முடியவில்லை.

அதேபோல், நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச் சாவடிகளில் வரிசை கட்டிக் கொண்டு நிற்கும் வாகனங்களை கடந்து போவதற்கும் அவசர வாகனகளுக்கு தாமதம் ஏற்படுகிறது. இதனால், மீட்புப் பணிகளில் தாமதம் ஏற்படுகிறது. அத்துடன் உயிரிழப்பும் ஏற்படுகிறது.

இத்தகைய சூழலில், தமிழகம் முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் தீயணைப்பு, ஆம்புலன்ஸ் வாகனங்கள் செல்ல தனி பாதை அமைக்க வேண்டும் எனக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டது. இதன் மீது விசாரணை நடத்திய சென்னை உயர் நீதிமன்றம், இதுகுறித்து நான்கு வாரத்தில் பதிலளிக்க மத்திய - மாநில அரசுகள், தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Chennai High court orders National Highway Commission

அடுத்த செய்தி