ஆப்நகரம்

'அரசியல் விமர்சனங்களை ஏற்க சகிப்பு தன்மை வேண்டும்', ஸ்டாலின் மீதான வழக்குகள் ரத்து..!

ஸ்டாலினுக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த 4 அவதூறு வழக்குகளை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

Samayam Tamil 10 Dec 2020, 5:15 pm
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இருந்த போது தற்போதைய திமுக தலைவர் ஸ்டாலின் மீது 12 அவதூறு வழக்குகள் தொடரப்பட்டன. அதில், ஜெயலலிதா கொடநாட்டில் ஒய்வு எடுத்து வருகிறார், சென்னை வெள்ளத்துக்கு அமைச்சர் உதயகுமார் துறையின் கவன குறைவே காரணம் என்று ஸ்டாலினின் விமர்சனங்கள் உள்ளிட்டவை அடக்கம்.
Samayam Tamil mk stalin


இந்த வழக்கு தொடர்பான விசாரணை இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்தது. அப்போது திமுக சார்பில் ஆஜரான வழக்கறிஞர், இப்படியான வழக்குகள் ஒருவரை தண்டிக்கப்பட வேண்டியவை அல்ல. ஒரு அரசியல் கட்சித்தலைவராக இருக்கும்போது ஆளுங்கட்சியின் செயல்பாடுகளை விமர்சிப்பதே ஆகும்'' என வாதிட்டார்.

அதற்கு அரசு தரப்பு வக்கீல் வாதாடுகையில், '' இந்த 12 வழக்குகள் மட்டுமில்லாமல் ஸ்டாலின் மீது பல வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. அவை ஒவ்வொன்றும் தனித்தன்மை வாய்ந்தவை. எனவே, ஸ்டாலின் தண்டிக்கப்பட வேண்டும் என தெரிவித்தார்.

ஜிபிஎஸ் ஊழல்: அமைச்சர் விஜயபாஸ்கருக்கு திமுக சவால்!

வழக்கை விசாரித்த நீதிபதிகள், பொது வாழ்க்கையில் உள்ளவர்கள் விமர்சனங்களை ஏற்கக்கூடிய சகிப்புத்தன்மை வேண்டும். அரசியல் கட்சி தலைவர்கள் தனிப்பட்ட விமர்சனங்களை தவிர்க்க வேண்டும். இதுபோன்ற வலுவிழந்த வழக்குகளை அரசியல் கட்சிகள் தொடர்வது வாடிக்கையாக உள்ளது. அவற்றை தவிர்க்க வேண்டும் என கூறி, ஜெயலலிதா குறித்து ஸ்டாலின் தெரிவித்த கருத்துகள் தொடர்பான 4 அவதூறு வழக்குகளை நீதிமன்றம் ரத்து செய்ததுடன், மீதமுள்ள 8 வழக்குகளின் விசாரணையை வரும் 14 ஆம் தேதி ஒத்திவைத்தது.

அடுத்த செய்தி