ஆப்நகரம்

சிலைக்கடத்தல் வழக்கு; சிபிஐக்கு மாற்றும் தமிழக அரசு ஆணை ரத்து; உயர்நீதிமன்றம் அதிரடி!

சென்னை: சிலைக்கடத்தல் வழக்குகளை சிபிஐக்கு மாற்றும் ஆணை ரத்து செய்யப்பட்டுள்ளது.

Samayam Tamil 30 Nov 2018, 3:42 pm
தமிழகத்தில் நடந்த சிலைக்கடத்தல் சம்பவங்களை விசாரிக்க, ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் தலைமையில் சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவை அமைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவு கடந்த ஆண்டு ஜூலையில் பிறப்பிக்கப்பட்டது.
Samayam Tamil Pon Manickavel


இதற்கிடையில் சிலை கடத்தல் விவகாரத்தில் சர்வதேச தொடர்புகள் இருப்பதால், இந்த வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டது. இதை எதிர்த்து வழக்கறிஞர் யானை ராஜேந்திரன், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

இதன் விசாரணையில், தமிழக அரசின் உத்தரவுக்கு தடை விதிக்கப்பட்டது. இந்த வழக்கில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்து, தொடர் விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவி ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் இன்று ஓய்வு பெறுகிறார்.

இந்த சூழலில் சிலைக்கடத்தல் வழக்கு சிபிஐக்கு மாற்றிய வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிமன்றம் நேற்று அறிவித்தது. அதன்படி, இன்று வழங்கப்பட்ட தீர்ப்பில் சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐக்கு மாற்றும் தமிழக அரசின் ஆணை ரத்து செய்து உத்தரவிடப்பட்டது.

தமிழக அரசின் அரசாணை சட்ட விரோதம் என்று கூறியது. மேலும் பொன்.மாணிக்கவேலை ஓராண்டு சிறப்பு அதிகாரியாக நியமித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

அடுத்த செய்தி