ஆப்நகரம்

ஆக்கிரமிப்பு கோவில்கள்: தமிழ்நாடு அரசு செய்தது என்ன?

அரசு நிலங்கள், சாலைகள் ஆகியவற்றை ஆக்கிரமித்து கட்டபட்டுள்ள வழிபாட்டுதலங்களை அகற்ற தமிழ்நாடு அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

Samayam Tamil 7 Nov 2019, 12:27 pm
சாலைகள், அரசு நிலங்கள் ஆகியவற்றை ஆக்கிரமித்து தனிநபர்கள் வீடுகள், வணிக நிறுவனங்கள் கட்டும்போது அரசு அதை அகற்ற நடவடிக்கை எடுக்கிறது. போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாகக் கூறி அவர் குறிப்பிட்ட கால அவகாசம் கொடுக்கப்பட்டு இடிக்கப்படுகின்றன.
Samayam Tamil ஆக்கிரமிப்பு கோவில்கள்: தமிழ்நாடு அரசு செய்தது என்ன?


ஸ்டாலின் மிசா சர்ச்சை: மாஃபா பாண்டியராஜன் உருவ பொம்மை எரிப்பு; கொந்தளிக்கும் திமுக

அதே சமயம் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு வழிபாட்ட்டுத்தலங்கள் சாலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளன. இதனால் போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதுடன் விபத்துகளுக்கும் வழிவகுக்கின்றன. இந்நிலையில்இது தொடர்பாக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த கண்ணதாசன் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.

கொடநாடு வழக்கு: சயான் மீதான குண்டர் சட்டம் ரத்து-சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி

அந்த மனுவில் தமிழ்நாட்டில் உள்ள சாலைகள், நடைபாதைகள், நீர்நிலைகள், அரசு புறம்போக்கு நிலங்கள், அரசு அலுவலக வளாகங்களை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கோவில்கள், மசூதிகள், தேவாலயங்களை அகற்றவேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். தமிழகம் முழுவதும் 3,168 வழிபாட்டு தலங்கள் ஆக்கிரமித்து கட்டுப்பட்டுள்ளதாகவும், இது பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூராக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த வழிபாட்டு தலங்களை ஒரு சிலர் சுய லாபத்திற்காக ஆக்கிரமித்து பயன்படுத்திவருவதாகவும் ஏற்கனவே உச்சநீதிமன்றம் இதுபோன்ற ஆக்கிரமிப்பு வழிபாட்டு தலங்களை அகற்ற உத்தரவிட்டும், இதற்காக குழு அமைக்கக் கோரியும் தமிழ்நாடு அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

வழக்கறிஞர்கள் தற்கொலை முயற்சி... டெல்லி நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு!!

இந்த வழக்கு நீதிபதிகள் சத்யநாராயணன், சேஷாயி அமர்வின் முன் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்பது குறித்து தமிழ்நாடு அரசு பதிலளிக்குமாறு உத்தரவிட்டு வழக்கை டிசம்பர் 6ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளனர். இந்த வழக்கில் வக்பு வாரியம் மற்றும் பேரயங்களின் அமைப்புகளையும் பிரதிவாதிகளாக சேர்க்க உத்தரவிட்டுள்ளனர்.

அடுத்த செய்தி