ஆப்நகரம்

புளூவேல் விளையாட்டை விசாரிக்க தாமாகவே முன்வந்தது மதுரை உயர்நீதிமன்ற கிளை

புளூவேல் விளையாட்டின் தாக்கத்தால் இளைஞர்கள் தற்கொலை செய்தது தொடர்ந்து, உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தாமகாவே முன்வந்து இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொண்டுள்ளது.

TNN 1 Sep 2017, 2:55 pm
புளூவேல் விளையாட்டின் தாக்கத்தால் இளைஞர்கள் தற்கொலை செய்தது தொடர்ந்து, உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தாமகாவே முன்வந்து இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொண்டுள்ளது.
Samayam Tamil chennai highcourt madurai branch suo moto for bluewhale challenge game
புளூவேல் விளையாட்டை விசாரிக்க தாமாகவே முன்வந்தது மதுரை உயர்நீதிமன்ற கிளை


கடந்த 2013ஆம் ஆண்டு ரஷ்ய இளைஞரால் கண்டுபிடிக்கப்பட்ட புளூவேல் விளையாட்டால் உலகளவில் 150க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் இதுவரை நடந்த 6 புளூவேல் மரணங்களில் 2 பேர் தமிழகத்தைச் சேர்ந்தது குறிப்பிடத்தக்கது.

புளூவேல் விளையாட்டின் தாக்கத்தால் இது சம்பந்தபட்ட அத்தனை இணையதள தொடர்புகளையும் துண்டிக்க மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது. ஆனாலும், புளூவேல் விளையாட்டை அதிகம் தேடியவர்களின் பட்டியலில், சர்வதேச அளவில் இந்தியா முதலிடத்தில் உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேடும் பட்டியலின் முதல் 5 இடத்தில் சென்னையும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டிலுள்ள பெரும்பாலான மாவட்டங்கள், இளைஞர்களையும், குழந்தைகளையும் இந்த விளையாட்டிலிருந்த காப்பாற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியை மேற்கொண்டுள்ளனர். இதைத் தொடர்ந்து, இன்று வேறொரு வழக்கை விசாரித்த வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி, புளூவேல் விளையாட்டை பற்றி வழக்கு தொடர விரும்பியதாக கூறப்படுகிறது. அப்போது பேசிய நீதிபதிகள் இப்பிரச்சனையை நீதிமன்றம் தாமாகவே முன்வந்து விசாரிப்பதாகவும், திங்கள் கிழமை விசாரணை நடைபெறும் என்றும் தெரிவித்தனர்.

Chennai highcourt Madurai branch suo-moto for bluewhale challenge game

அடுத்த செய்தி