ஆப்நகரம்

ராஜ ராஜ சோழன் நினைவிடம்- தொல்லியல் துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

தஞ்சாவூர் மாவட்டம் உடையாளூரில், ராஜ ராஜ சோழன் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் தொல்லியல் துறை சார்பில் நடத்திய ஆய்வு அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.

Samayam Tamil 25 Apr 2019, 11:05 pm
ராமநாதபுரத்தை சேர்ந்த வழக்கறிஞர் திருமுருகன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில்," சோழ சாம்ராஜ்ஜியத்தின் பேரரசன் முதலாம் இராச இராச சோழன் கிபி 985 முதல் கிபி 1014 வரையில் ஆட்சி புரிந்தார்.
Samayam Tamil ராஜ ராஜ சோழன் நினைவிடம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு
ராஜ ராஜ சோழன் நினைவிடம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு


இவரது இயற்பெயர் அருள்மொழிவர்மன். இவரது ஆட்சி காலத்தில் நுண்கலை, கட்டிடக்கலை, சமயம், இலக்கியம் என அனைத்து துறைகளும் சிறந்து விளங்கின. இதற்கான சான்றுகளாக தஞ்சை பெரிய கோயில், ஸ்ரீரங்கம் கோயில் உள்ளிட்டவை உள்ளன. இவருடைய ஆட்சியும், கட்டிடக்கலை இன்று அளவும் உலக அளவில் அனைவராலும் பாரட்டப்பட்டு புகழந்து பேசபட்டு வருகிறது.

ஆனால் இவருடைய சமாதி தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உடையாளூர் என்ற கிராமத்தில் கேட்பாரற்று பராமரிப்பு இன்றி சிதைந்து கிடக்கிறது. இந்த கிராமத்தை சுற்றி ஆரியப்படை, சோழப்பட்டை, சோழமாளிகை, பட்டீஸ்வரம் போன்ற கிராமங்கள் உள்ளன. இங்கு இவரது ஆட்சிகாலத்தில் கட்டப்பட்ட அரண்மனை மற்றும் மாளிகைகள் உள்ளன. இங்கு முறையாக தொல்லியல் துறை ஆய்வு செய்தால் சோழர்களின் வரலாற்று சான்றுகள் கிடைக்கும்.

மிகப்பெரும் சாம்ராஜ்ஜியத்தை கட்டியமைத்த ராஜ ராஜ சோழனின் சமாதியின் இன்றைய நிலை மிகவும் மோசமாக உள்ளது. ஆனால் பிற மாநிலங்களில் அந்த மாநிலத்தில் புகழ்பெற்றவர்களுக்கு அவர்களின் புகழை பரப்ப சிலை அமைக்கப்பட்டுள்ளது

உதாரணமாக மகாராட்டிர மாநிலத்தில் சத்ரபதி சிவாஜி சிலையை அரபிக்கடலில் 4900 கோடி செலவில் நிறுவியுள்ளது. இதே போல் குஜராத் மாநில அரசு சர்தார் வல்லபாய் படேலின் சிலையை 3ஆயிரம் கோடி செலவில் நிறுவியுள்ளது.

இதேபோல் ராஜ ராஜ சோழனின் சிலையை இந்திய பெருங்கடல் அல்லது வங்காளவிரிகுடா கடல்பகுதியில் நிறுவவும், அவரது சமாதி உள்ள இடத்தில் மணிமண்டபம் கட்டி அதனை அனைவரும் பார்த்து அறியும் விதமாக சுற்றுலா தளமாக அறிவிக்கவும் உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன்,சுந்தர் அமர்வில் விசாரனைக்கு வந்தது. அப்போது அரசுத்தரப்பில் உயர்நீதிமன்றம் உத்தரவின் படி இரண்டு நாட்கள் உடையாளூர் பகுதியில் இராச இராச சோழன் அடக்கம் செய்ய பட்ட இடத்தில் தொல்லியல் துறை சார்பாக நவீன தொழில்நுட்ப உதவியுடன் ஆய்வு செய்ய பட்டுள்ளது

அந்த ஆய்வுகள் அனைத்து சேதனைக்கு அனுப்ப பட்டுள்ளது என்று அறிக்கை தாக்கல் செய்ய பட்டது இதனை பதிவு செய்த நீதிபதிகள் சோதனை யின் முடிவுகளை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கு தேதி குறிப்பிடாமல் தீர்ப்புக்காக ஒத்திவைத்தனர்.

அடுத்த செய்தி