ஆப்நகரம்

மாணவி அனிதாவின் மரணம் குறித்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு.!

அரியலூர் மாணவி அனிதாவின் மரணத்தைக் குறித்து விசாரிக்கும்படி மாவட்ட காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

TNN 17 Oct 2017, 10:06 am
அரியலூர் மாணவி அனிதாவின் மரணத்தைக் குறித்து விசாரிக்கும்படி மாவட்ட காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Samayam Tamil chennai highcourt orders to query for students anitha death
மாணவி அனிதாவின் மரணம் குறித்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு.!


அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி அனிதா, பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் 1176 மதிப்பெண்கள் எடுத்திருந்தார். மருத்துவ படிக்க விருப்பம் கொண்ட அனிதா, நீட் தேர்வில் தேர்ச்சி பெறாதாதன் காரணமாக அந்த வாய்ப்பை இழந்தார். இந்த நிலையில், மனவேதனை தாங்காமல் மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டார். அனிதாவின் மரணத்தைத் தொடர்ந்து நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், நமது திராவிட இயக்கம் அமைப்பின் தலைவர் ஓவியர் ரஞ்சன் என்பவர் அனிதாவின் மரணத்தைக் குறித்து விசாரிக்கக் கோரி செந்துறை காவல் காவல்நிலைய ஆய்வாளரிடம் கடந்த செப்டம்பர் 9ஆம் தேதி புகாரை அளித்ததாகவும் ஆனால் இதுவரை அதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, உடனடியாக புகார் மீது முதற்கட்ட விசாரணையை நடத்தி வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளது. முகாந்திரம் இல்லையென்றால் அதற்கான காரணத்தை ஒரு வாரத்திற்குள் தாக்கல் செய்ய வேண்டியும் அரியலூர் மாவட்ட காவல் துறைக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.

Chennai highcourt orders to query for student's anitha death

அடுத்த செய்தி