ஆப்நகரம்

கல்லூரியில் பொங்கல் திருவிழா: உங்களுக்குப் பதிலாக நாங்கள் அணிந்து கொண்டோம்!

சென்னையில் நடந்த ஜெயின் கல்லூரியில் மாணவிகள் அனைவரும் தமிழ் கலாச்சாரத்தில் வந்து அசத்தியுள்ளனர்.

Samayam Tamil 14 Jan 2018, 5:27 am
சென்னையில் நடந்த ஜெயின் கல்லூரியில் மாணவிகள் அனைவரும் தமிழ் கலாச்சாரத்தில் வந்து அசத்தியுள்ளனர்.
Samayam Tamil chennai jail college girls celebrating pongal festival in tamil culture
கல்லூரியில் பொங்கல் திருவிழா: உங்களுக்குப் பதிலாக நாங்கள் அணிந்து கொண்டோம்!


'பொங்கும் மங்கலம்' எங்கும் தங்கிட சாதி, இன, மதம் கடந்து தமிழகத்தில் அனைவரும் கொண்டாடும் பண்டிகை பொங்கல். மஞ்சள் தோரணங்கள் கட்டி, புது அரிசியில் பொங்கல் பொங்கி, கரும்பு உண்டு கொண்டாடப்படும் தைப்பொங்கல், தை 1 அன்று தமிழர்களால் சிறப்பாக கொண்டாடப்படும் ஒரு தனிப்பெரும் விழா. 2வது நாள் மாடுகளுக்காக கொண்டாடப்படும் மாட்டுப் பொங்கல். 3வது நாளில் காணும் பொங்கல். இதில், மக்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் சந்தித்து தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள்.

இந்த முறையே காலம் காலமாக நடந்து வருகிறது. பொங்கல் பணிகையின் போது ஆண்கள் பாரம்பரிய முறைப்படி வேஷ்டி, சட்டையும், பெண்கள் பட்டுப்புடவையும் அணிந்து வந்து பொங்கல் திருநாளை கொண்டாடுவார்கள். இந்த பண்டிகையை முன்னிட்டு நேற்று சென்னை ஜெயின் கல்லூரியில் மாணவிகள் அனைவரும் ஆண்களைப் போன்று, வேஷ்டி சட்டையில் வந்து பொங்கல் வைத்து கொண்டாடியுள்ளனர்.

அடுத்த செய்தி