ஆப்நகரம்

சென்னையில் தலைவிரித்தாடும் வேலை இல்லா திண்டாட்டம்!

சென்னையில் வேலைவாய்ப்பு மிகவும் சரிவடைந்துள்ளதாக வேலைவாய்ப்பு இணையதளம் வெளியிட்ட தகவல் மூலம் தெரியவந்துள்ளது.

TOI Contributor 14 Jul 2017, 10:10 am
சென்னையில் வேலைவாய்ப்பு மிகவும் சரிவடைந்துள்ளதாக வேலைவாய்ப்பு இணையதளம் வெளியிட்ட தகவல் மூலம் தெரியவந்துள்ளது.
Samayam Tamil chennai job market records overall decreased
சென்னையில் தலைவிரித்தாடும் வேலை இல்லா திண்டாட்டம்!


இது நாள் வரை சென்னையில் படித்தவர்கள், படிக்காதவர்கள் என்று எல்லா தரப்பினருக்கும் அதிக அளவில் வேலைவாய்ப்பு இருந்து வந்தது. இதனால் இளைஞர்கள் பலரும் தமிழகத்தின் தலைநகரான சென்னை நோக்கி வந்துகொண்டு இருக்கின்றனர். மென்பொருள் மற்றும் ஆட்டோ மொபைல் நிறுவனங்கள் அதிக அளவில் வேலை வாய்ப்புகளை தருகின்றன.

ஆனால் சமீபத்தில் சென்னையில் வேலைவாய்ப்பு மிகவும் குறைந்துவிட்டதாக மான்ஸ்டர்.காம் என்ற வேலை வாய்ப்பு இணையதளம் கூறியுள்ளது. ஆன்-லைன் மூலம் பணியாளர்கள் சேர்ப்பது சுமார் 12 சதவீதம் குறைந்துள்ளதாக இந்நிறுவனம் அதிர்ச்சி தகவலை அளித்துள்ளது.

பன்னாட்டு நிறுவனங்கள் பலவும் தங்களின் ஊழியர்களை வெளியேற்றி வரும் நிலையில் இந்த தகவல் இளைஞர்களுக்கு மேலும் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. இந்தியாவில் பணமதிப்பிழப்பு அறிவிப்பு வெளியான பின்பு தொழில்கள் பலவும் நசிந்து போனதால், வேலை வாய்ப்பின்மை அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி