ஆப்நகரம்

பொன் மாணிக்கவேல் போல் வேடமணிந்து திருத்தணிக்கு காவடி எடுத்த சமூக ஆர்வலர்!

சென்னையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர், சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவின் சிறப்பு அதிகாரியாக இருக்கும் பொன் மாணிக்கவேலுக்கு பணி நீட்டிப்பு செய்ய வலியுறுத்தி அவரை போன்று வேடமணிந்து காவடி எடுத்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

Samayam Tamil 3 Dec 2018, 2:00 pm
சென்னையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர், சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவின் சிறப்பு அதிகாரியாக இருக்கும் பொன் மாணிக்கவேல் போன்று வேடமணிந்து காவடி எடுத்த நிகழ்வு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.
Samayam Tamil pon


தமிழகத்தின் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஐஜியாக இருந்த பொன் மாணிக்கவேல், அரசியல்வாதிகள், அதிகாரிகள் துணையுடன் கோயில் சிலைகள் கொள்ளை போனதைக் கண்டுபிடித்து பரபரப்பை கிளப்பினார். மேலும் சிலைக் கடத்தலில் தொடர்புடையவர்கள் மீதும் வழக்கு தொடர்ந்து நடவடிக்கை எடுத்தார்.

இத்தகைய செயல்கள் மூலமாக தமிழக மக்களிடையே பிரபலமான ஐ.ஜி பொன் மாணிக்கவேல், கடந்த 30ம் தேதி ஓய்வு பெற இருந்த நிலையில், அவரது பதவியை மேலும் ஓராண்டு நீட்டித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அத்துடன் அவர் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவின் சிறப்பு அதிகாரியாகச் செயல்படுவார் என்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இந்நிலையில், சென்னையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் நர்மதா நந்தகுமார், பொன் மாணிக்கவேலுக்கு 2 ஆண்டுகள் பணி நீட்டிப்பு செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, பொன் மாணிக்கவேல் போன்று வேடமணிந்து திருத்தணி முருகன் கோயிலுக்கு காவடி எடுத்தார். அவரது புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அடுத்த செய்தி