ஆப்நகரம்

11 மாவட்டங்களில் கனமழை: சென்னை வானிலை ஆய்வு மையம்!

தமிழ்நாடு, புதுச்சேரியில் அடுத்த சில தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு வெளியாகியுள்ளது.

Samayam Tamil 2 Jul 2022, 1:36 pm
11 மாவட்டங்களில் கனமழைக்கான வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
Samayam Tamil Rainfall


மேற்குதிசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, 02.07.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், விழுப்புரம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

03.07.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

04.07.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

எடப்பாடி பயப்படுவது இதற்கு தான்: பொதுக்குழு நடக்க வாய்ப்புள்ளதா?

05.07.2022, 06.07.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):

ஊத்துக்கோட்டை (திருவள்ளூர்), சின்னக்கல்லார் (கோயம்புத்தூர்), கடலூர், திருவள்ளூர் தலா 5, சின்கோனா (கோயம்புத்தூர்), புவனகிரி (கடலூர்), காட்டுமன்னார்கோயில் (கடலூர்), லால்பேட்டை (கடலூர்), திருவாலங்காடு (திருவள்ளூர்) , திண்டிவனம் (விழுப்புரம்) தலா 4, பூண்டி ( திருவள்ளூர் ) , வால்பாறை PTO (கோயம்புத்தூர்), அரக்கோணம் (ராணிப்பேட்டை), செஞ்சி (விழுப்புரம்), கும்மிடிப்பூண்டி (திருவள்ளூர்), வால்பாறை தாலுக்கா அலுவலகம் (கோயம்புத்தூர்), மேல் பவானி (நீலகிரி), நடுவட்டம் (நீலகிரி), மரக்காணம் (விழுப்புரம்) , திருப்பத்தூர், தாம்பரம் (செங்கல்பட்டு), சோளிங்கர் (ராணிப்பேட்டை) தலா 3, வானுர் (விழுப்புரம்), வாலாஜா (ராணிப்பேட்டை), ஆரணி (திருவண்ணாமலை), திருக்கழுக்குன்றம் (செங்கல்பட்டு), சீர்காழி (மயிலாடுதுறை), ஸ்ரீமுஷ்ணம் (கடலூர்), சோலையார் (கோயம்புத்தூர்), வாலாஜாபாத் (காஞ்சிபுரம்), வந்தவாசி (திருவண்ணாமலை), தாமரைப்பக்கம் (திருவள்ளூர்), செங்கல்பட்டு, வேப்பூர் (கடலூர்) தலா 2.
அதிமுக பொதுக்குழுவில் பண விநியோகம்: போட்டுடைத்த மாநில நிர்வாகி!
மீனவர்களுக்கான எச்சரிக்கை :

02.07.2022 முதல் 06.07.2022 வரை: இலட்சத்தீவு பகுதி, கர்நாடகா - கேரளா கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு, மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

02.07.2022 முதல் 04.07.2022 வரை: குமரிக்கடல் பகுதி, மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோரப் பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் பலத்தக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

03.07.2022, 04.07.2022: வடக்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி