ஆப்நகரம்

மாண்டஸ் சூறாவளி.. பலத்த சேதத்தை ஏற்படுத்தும்.. வானிலை மையம் எச்சரிக்கை

மாண்டஸ் புயல் சூறாவளியாக மாறி தாழ்வான பகுதிகளில் பலத்த சேதம் ஏற்படலாம் என்று வானிலை மையம் கணித்துள்ளது.

Authored byதிவாகர் மேத்யூ | Samayam Tamil 8 Dec 2022, 3:35 pm
வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று இரவு புயலாக வலுப்பெற்று, இந்திய நிலப்பரப்பை நெருங்கி வருகிறது. இந்த புயலுக்கு மாண்டஸ் என பெயரிடப்பட்டுள்ளது. தற்போது சென்னைக்கு தென்கிழக்கே 550 கி.மீ. தொலைவிலும், காரைக்காலுக்கு 460 கி.மீ. தொலைவிலும் நிலை கொண்டுள்ள மாண்டூஸ் புயல் மேற்கு வடமேற்கு திசையில் மணிக்கு 11 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருவதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும், இப்புயல், சூறாவளியாக மாறி வடமேற்கு திசையில் நகர்ந்து, நாளை இரவு கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil cyclone mandous
மாண்டூஸ் புயல்


இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள விரிவான தகவலில் கூறப்பட்டுள்ளதாவது;

மாண்டஸ் புயல் இன்று காலை 5:30 மணியளவில் தென்மேற்கு வங்காள விரிகுடாவில் மையம் கொண்டுள்ளது. இது, திருகோணமலைக்கு (இலங்கை) கிழக்கு-வடகிழக்கே சுமார் 330 கிமீ தொலைவும், காரைக்காலில் இருந்து 500 கிமீ கிழக்கு-தென்கிழக்கே மற்றும் சென்னைக்கு தென்கிழக்கே 580 கிமீ தூரம் வித்தியாசத்தில் நிலை கொண்டுள்ளது.

இந்த புயல் அடுத்த இரண்டு நாட்களில் மேற்கு-வடமேற்கு நோக்கி நகர்வதைத் தொடரும். மேலும் நாளை இரவு மற்றும் சனிக்கிழமை அதிகாலையில், மாண்டூஸ் புயல், புதுச்சேரி மற்றும் ஸ்ரீஹரிகோட்டா இடையே, வட தமிழ்நாடு-தெற்கு ஆந்திரா கடற்கரையில் கரையைக் கடக்கும்.

மாண்டஸ் சூறாவளி இன்று தீவிரமடைந்து அதிகபட்சமாக 80-90 கிமீ வேகத்தில் காற்று வீசும். அதை தொடர்ந்து இன்று காலை 11:30 முதல் இரவு 11:30 மணி வரை மணிக்கு 100 கிமீ வேகத்தில் வீசும்.
அதிகபட்சமாக மணிக்கு 85 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும்.

அடுத்த மூன்று நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் அதே வேளையில், தீவிர மழைபொழிவையும் எதிர்பார்க்கலாம்.

டிசம்பர் 8:

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் கடலோரப் பகுதிகளில் (64.5 மி.மீ.-204 மி.மீ.) கனமழை முதல் மிகக் கனமழை பெய்யக்கூடும். தென் கடலோர ஆந்திரா மற்றும் ராயலசீமாவை ஒட்டியுள்ள பகுதிகளில் 64.5 மிமீ-115.5 மிமீ கனமழை கொட்டி தீர்க்கும்.

டிசம்பர் 9:

ஒரு சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும். தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அதை ஒட்டிய தென் கடலோர பகுதிகளில் 204 மிமீக்கு மேல் மிகக் கனமழை பதிவாகும்.

டிசம்பர் 10:

வட தமிழகம், ராயலசீமா மற்றும் தெற்கு ஆந்திராவின் தாழ்வான இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும். மாண்டஸ் புயல் எதிரொலியாக தமிழகத்திற்கு வெள்ளிக்கிழமை சிவப்பு எச்சரிக்கையையும், வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் ஆரஞ்சு எச்சரிக்கையையும் விடுக்கப்பட்டுள்ளது.

பாதிப்பு:

புயல் மழை தாக்கம், தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேக்கம், இயற்கை சேதத்துக்கு வழிவகுக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

அடுத்த மூன்று நாட்களுக்கு பலத்த காற்று தென்கிழக்கு கடற்கரையை தாக்கும் என்பதால் கடல் அலைகள் மிகவும் கொந்தளிப்பாக இருக்கும் எனவும், எனவே மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
எழுத்தாளர் பற்றி
திவாகர் மேத்யூ
திவாகர். நான் தொலைக்காட்சி, நியூஸ் ஆப், செய்தி இணைதளம் என ஊடக துறையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பயணித்து வருகிறேன். எழுத்தின் மீதான ஆர்வமும் ஊடகத்தின் மீது இருக்கும் பற்றால் இத்துறையை தேர்வு செய்துள்ளேன். அரசியல், குற்றம், அரசியல் - குற்றம் சார்ந்த அலசல், அரசு சார்ந்த செய்திகளை எவ்வித சமரசமும் இல்லாமல் எழுதி வருகிறேன். கடந்த 3 ஆண்டுகளாக TIMES Of INDIA சமயம் தமிழில் Senoir Digital Content Producer ஆக பணியாற்றுகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி