ஆப்நகரம்

நாகை, கடலூா் உட்பட 7 மாவட்டங்களில் பலத்த காற்று வீசும்: வானிலை மையம்!

கஜா புயலால் நாகை, கடலூா் உட்பட 7 மாவட்டங்களில் பலத்த காற்று வீசும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Samayam Tamil 13 Nov 2018, 4:58 pm
கஜா புயலால் நாகை, கடலூா் உட்பட 7 மாவட்டங்களில் பலத்த காற்று வீசும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Samayam Tamil 201811130937465372_1_stormgaja._L_styvpf


சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ். பாலச்சந்திரன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

’மத்திய மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள கஜா புயல் தற்போது நாகையின்வடகிழக்கே 790 கி. மீ தொலைவில் உள்ளது. தற்போதைய நிலவரப்படி கஜா புயல் நவம்பர் 15ஆம் தேதி பாம்பன் மற்றும் கடலூருக்கு இடையில் கரையை கடக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புயல் கரையை கடக்கும்போது கடலூர், நாகப்பட்டினம், காரைக்கால், திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம்ஆகிய மாவட்டங்களில் 80 முதல் 90 கிலோமிட்டர் வேகத்தில் பலத்த காற்றானது வீசக்கூடும். சில சமயத்தில் 100 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். வருகின்ற 15ஆம் தேதி பெரும்பாலான இடத்தில் மழை பெய்யக்கூடும். ஒரு சில இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும். கடலூர், நாகப்பட்டனம், புதுக்கோட்டை,ராமநாதபுரம், தஞ்சை புதுக்கோட்டையில் அதிகபட்ச மழை பெய்யும்.

சென்னையை பொருத்தவரை 15 மற்றும் 16ஆம் தேதிகளில் மிதமான மழை பெய்யும். சென்னைக்கு இந்த புயலால் நேரடியாக பாதிப்பு இல்லை. கடந்த 24 மணிநேரத்தில் கஜா புயல் 4 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து கொண்டிருந்தது. தற்போது புயல் வேகமாக நகரத்தொடங்கி உள்ளது. மேலும் மீனவர்கள் 15 ஆம் தேதி வரை கடலுக்குள் செல்ல வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

அடுத்த செய்தி