ஆப்நகரம்

தமிழகத்தில் மழையளவு படிப்படியாக குறையும்.!

தமிழகத்தில் இன்னும் இரண்டு நாட்களில் மழை படிப்படியாகக் குறையும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

TNN 13 Nov 2017, 12:53 pm
தமிழகத்தில் இன்னும் இரண்டு நாட்களில் மழை படிப்படியாகக் குறையும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
Samayam Tamil chennai meteorology centre press meet
தமிழகத்தில் மழையளவு படிப்படியாக குறையும்.!


சென்னை வானிலை மைய அதிகாரி பாலச்சந்திரன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,

தென்மேற்கு வங்கக்கடலில், நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு நிலை படிப்படியாக வலுப்பெற்று அதே நிலைக் கொண்டிருக்கிறது. இதனால் சென்னை, காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், மற்றும் புதுவை ஆகிய இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையைப் பொருத்தவரை, வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில நேரங்களில் மழையும், பலத்த மழையும் பெய்ய வாய்ப்புள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக சென்னை எண்ணூரில் 11 செ. மீ மழை பதிவாகியுள்ளது.

காற்றழுத்த தாழ்வு நிலை வடதிசை நோக்கி நகரும் வாய்ப்புள்ளதால், அடுத்து வரும் இரு தினங்களில் தமிழகத்தில் படிபடியாக மழையின் அளவு குறையும்.
இவ்வாறு சென்னை வானிலை மைய அதிகாரி பாலச்சந்திரன் அறிவித்துள்ளார்.

அடுத்த செய்தி