ஆப்நகரம்

Chennai Metro: ரயில் ஊழியர்கள் மூன்றாவது நாளாக போராட்டம்!

மெட்ரோ ரயில் பணியாளர்களை பணி நீக்கம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து மற்ற ஊழியர்கள் மூன்றாவது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் சென்னை மெட்ரோ ரயில்சேவை பாதிக்கப்பட்டுள்ளது

Samayam Tamil 1 May 2019, 11:37 am
மெட்ரோ ரயில் பணியாளர்களை பணி நீக்கம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து மற்ற ஊழியர்கள் மூன்றாவது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் சென்னை மெட்ரோ ரயில்சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil chennai metro 1


சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகத்தில் நிரந்தர பணியாளர்கள் இருக்கும் போதே, அதிக சம்பளத்துக்கு தற்காலிக பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 8 நிரந்தர பணியாளர்கள் சங்கம் ஒன்றை ஆரம்பித்தனர். இதனால் அவர்கள் 8 பேரையும் மெட்ரோ ரயில் நிர்வாகம் பணி நீக்கம் செய்தது.

நிரந்தர பணியாளர்களை பணி நீக்கம் செய்யப்பட்ட செய்தியறிந்த மற்ற மெட்ரோ ரயில் பணியாளர்கள், அவர்களின் பணி நீக்கத்தை ரத்து செய்யும்படி நேற்று முன்தினம் போராட்டத்தில் குதித்தனர். இதனால் சென்னையில் மெட்ரோ ரயில் சேவை ஸ்தம்பித்தது. இதையடுத்து மெட்ரோ ரயில் நிர்வாகத்தினர், சிஐடியு மாநில தலைவர் செளந்தரராஜன், தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் ஜானகிராமன் ஆகியோர் சென்னை குறளகத்தில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், இந்த பேச்சுவார்த்தையில் பணி நீக்கம் செய்யப்பட்டதை ரத்து செய்ய முடியாது என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் கூறியதால், ஊழியர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று அறிவித்தனர்.

இந்நிலையில், மெட்ரோ ரயில் பணியாளர்களின் பேராட்டம் இன்று மூன்றாவது நாளாக தொடர்கிறது. இதனால் 85 சதவீதம் மெட்ரோ ரயில் சேவை நிறுத்தப்பட்டள்ளது. இருப்பினும், இன்று மே 1 விடுமுறை தினம் என்பதால், வழக்கமான விடுமுறை தின கால அட்டவணையின்படி மெட்ரோ ரயில்இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே மெட்ரோ ரயில் கட்டுப்பாட்டு அறைக்குள் அத்துமீறி நுழைந்ததாக 18 ஊழியர்கள் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி