ஆப்நகரம்

'10 வருட கனவு' சென்னை அழகை தமிழில் அறிவித்த விமானி..! பயணிகள் ஷாக்...

சென்னை டு மதுரைக்கு சென்ற விமானத்தின் கேப்டன் பயணிகளுக்கு தமிழில் அறிவித்த வீடியோ சமூக ஊடகங்களை அலங்கரித்து வருகிறது.

Samayam Tamil 24 Jul 2020, 8:12 pm
விமான நிலையங்களில் ஆங்கிலத்தையும், இந்தியையும் கேட்டுக்கொண்டிருந்த நம் காதுகளுக்கு திடீரென தமிழ் அறிவிப்பு வந்தால் எப்படி இருக்கும்? அதுபோல விமானம் பறந்து கொண்டிருக்கையில் சென்னையின் அழகை நிதானமாக அறிவித்த விமானி பிரியவிக்னேஷுக்கு ஒட்டுமொத்த தமிழர்களும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
Samayam Tamil pilot priya vignesh


சென்னை ராயபுரத்தில் பிறந்து வளர்ந்த பிரியவிக்னேஷ் தேனியை பூர்விகமாக கொண்டவர். வடசென்னை உப்புக்காற்றை நாள்தோறும் சுவாசித்த விக்னேஷுக்கு விமானி ஆக வேண்டும் என்பது நாள்பட்ட கனவு. கடும் பொருளாதார நெருக்கடிகளை சமாளித்து, அவரது கனவை நினைவாக்கிய பெற்றோருக்கும், ஒருநாள் நிச்சயம் வெல்வாய் என்று கூறி தோல் கொடுத்த அவரது நண்பர்களுக்கு இன்றும் அவர் கண்ணீர் மல்க நன்றியை தெரிவிக்கிறார்.

விமானி பயிற்சியில் இருந்தபோதே, ஒருநாள் தமிழில் அறிவிப்பு செய்யவேண்டும் என்பது அவருடைய மற்றொரு கனவாக இருந்துள்ளது. இந்நிலையில் சென்னையில் இருந்து மதுரைக்கு புறப்பட்ட இண்டிகோ விமானத்தின் கேப்டனாக இருந்த அவர், பயணிகள் எந்த இடத்திற்கு மேல் பயணிக்கின்றனர் என்பதை தமிழில் அறிவித்தார்.


அந்த வீடியோவை அவரது நண்பர் இணையத்தில் வெளியிட்டு, '' பத்து வருடங்களுக்கு முன்பாக நீ சொன்னதை தற்போது நிறைவேற்றியுள்ளாய்'' என நெகிழ்விடன் தெரிவித்துள்ளார்.

'சீட் பெல்ட்' அணியாமல் காரில் சென்ற நடிகர் ரஜினிக்கு அபராதம்.!?

காலம் காலமாக வட சென்னை என்றாலே பலவகையான பெயர்களுடன் அடையாளப்படுவது வாடிக்கை. அந்த இடத்தில் இருந்து, பெரும் பண நெருக்கடியில் படித்து விமானியாகியுள்ள பிரியவிக்னேஷ் ஒரு குடும்பத்தின் லட்சிய மகனாகவும், உள்ளூரிலும் ஆங்கிலத்தில் வெளியாகும் அறிவிப்புகளை முதன்முறை தமிழில் அறிவித்த தமிழ் மகன் என்ற பெருமையையும் சேர்த்துள்ளார்.

அடுத்த செய்தி