ஆப்நகரம்

இதய அறுவை சிகிச்சை: கிரீன் காரிடர் அமைத்த சென்னை போலீஸ்

இதய அறுவை சிகிச்சைக்காக, விமான நிலையம் முதல் பெரும்பாக்கம் வரை போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்கும் பொருட்டு சென்னை போலீசார் கிரீன் காரிடர் அமைத்தனர்.

TOI Contributor 10 Apr 2016, 6:12 pm
சென்னை: இதய அறுவை சிகிச்சைக்காக, விமான நிலையம் முதல் பெரும்பாக்கம் வரை போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்கும் பொருட்டு சென்னை போலீசார் கிரீன் காரிடர் அமைத்தனர்.
Samayam Tamil chennai police create green corridor to transport brain dead patients heart
இதய அறுவை சிகிச்சை: கிரீன் காரிடர் அமைத்த சென்னை போலீஸ்


சென்னை பெரும்பாக்கம் குளோபல் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில், உயிருக்கு போராடிய நோயாளி ஒருவருக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டியது கட்டாயமாக இருந்தது.

இந்நிலையில், பெங்களூரு மருத்துவமனையில் மூலைச் சாவடைந்த ஒருவரின் இதயம் விமானம் மூலம் சென்னை வந்தடைந்தது. மதியம் 1.30 மணியளவில் வந்த இதயம், மருத்துவமனை அமைந்துள்ள பெரும்பாக்கத்தை, அதாவது சுமார் 15.5 கி.மீ தூரத்தை 14 நிமிடங்களில் அடைந்தது.

போக்குவரத்து நெரிசல் மற்றும் சிக்னல்களில் சிக்காமல் இருக்கும் பொருட்டு முன்னதாகவே, கிரீன் காரிடர் முறை அமைக்கப்பட்டிருந்தது. காவல் துணை ஆணையர், மூன்று ஆய்வாளர்கள் உள்பட மொத்தம் 24 போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

அடுத்த செய்தி