ஆப்நகரம்

சென்னையை பின்னுக்குத் தள்ளியுள்ள பிற மாவட்டங்கள்: எதில் தெரியுமா?

தலைநகர் சென்னையில் அன்றாட மின்நுகர்வின் பயன்பாடு குறிப்பிடத்தக்க அளவு குறைந்துள்ளதாக மின் வாரியம் தெரிவித்துள்ளது.

Samayam Tamil 6 Apr 2020, 7:06 pm
அன்றாட மின்சார பயன்பாட்டு அளவின் அடிப்படையில் மாநிலத்தின் பிற மாவட்டங்கள், சென்னை மாநகரை பின்னுக்கு தள்ளியுள்ளன.
Samayam Tamil tneb


தலைமைச் செயலகம் தொடங்கி அனைத்து அரசுத் தறைகளின் தலைமை அலுவலகங்கள் மட்டுமின்றி, தொழிற்பேட்டைகள், ஐடி நிறுவனங்கள், ஆயிரக்கணக்கான சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் சென்னையில் அமைந்துள்ளன.

இதேபோன்று பிற மாவட்டங்கள், வெளிமாநிலங்களை சேர்ந்த லட்சக்கணக்கானோர் தலைநகரில் தந்தி பணியாற்றி வருகின்றனர். இதன் காரணமாக சென்னையில் குடியிருப்புகள், தங்கும் விடுதிகளும் தலைநகரில் அதிகம்.

சென்னை மக்களுக்கு ஹாப்பி நியூஸ்: வீடு தேடி வரும் ஆவின் பால் கார்டுகள்!!

இவற்றின் காரணமாக, மாவட்டத்தின் பிற பகுதிகளை ஒப்பிடும்போது சென்னை மாநகரின் அன்றாட மின்நுகர்வின் தேவை அதிகம்.

ஆனால், தற்போது ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால், அனைத்து நிறுவனங்களும் மூடப்பட்டு , பணியாளர்கள் வீட்டிலிருந்து பணிபுரிந்து வருவதால், சென்னை மாநகரில் மின்நுகர்வின் அளவு கணிசமாக குறைந்துள்ளது.

தமிழகத்தில் இன்று 50..! சென்னை தந்த அதிர்ச்சி..!

அதாவது நாளொன்றுக்கு சராசரியாக 500 மெகாவாட் அளவுக்கு மின்நுகர்வின் பயன்பாடு குறைந்துள்ளதாக, தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் தெரிவித்துள்ளது.

அதேசமயம், சென்னை தவிர்த்து மாநிலத்தின் பிற பகுதிகளில் அன்றாட மின்நுகர்வின் பயன்பாடு சராசரியாக 400 மெகாவாட் அளவுக்கு அதிகரித்துள்ளது. கிராமப்புறங்களில் விவசாயத்துக்கான மின்சார பயன்பாடும் கணிசமாக அதிகரித்துள்ளதாகவும் மின் வாரியம் தெரிவித்துள்ளது.

அடுத்த செய்தி