ஆப்நகரம்

தமிழகத்தில் 8ம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கும் - வானிலை மையம்

தமிழகத்தில் வருகிற 8ம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தொிவித்துள்ளது.

Samayam Tamil 5 Oct 2018, 4:15 pm
இந்த ஆண்டு தமிழகத்திற்கான வடகிழக்குப் பருவமழை வருகிற 8ம் தேதி தொடங்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தொிவித்துள்ளது.
Samayam Tamil Heavy rain


சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநா் பாலச்சந்திரன் இன்று செய்தியாளா்களிடம் அளித்த பேட்டியில், தமிழகத்திற்கு வடகிழக்கு பருவமழை வருகிற 8ம் தேதி முதல் தொடங்க வாய்ப்புள்ளது. தமிழகத்தில் வழக்கமாக வடகிழக்குப் பருவமழை அக்டோபா் 15ம் தேதி தொடங்கும் நிலையில் இந்த ஆண்டு சற்று முன்னதாகவே தொடங்குகிறது.

வருகிற 8ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும். தென்கிழக்கு அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி புயலாக மாறி ஓமன் நாட்டிற்கு செல்லும். இதனால் வருகிற 8ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிககனமழை பெய்யக் கூடும்.

ரெட் அலா்ட் கொடுக்கப்பட்டாலும் அது குறித்து மக்கள் அச்சப்பட வேண்டியதில்லை. கனமழை பெய்யும் நேரத்தில் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என்று அவா் தொிவித்துள்ளாா்.

மழை அளவு
கடந்த 24 மணி நேரத்தில் கடலூா் மாவட்டம் காட்டுமன்னாா் கோவில், திருச்சி மாவட்டம் புள்ளம்பாடியில் தலா 11 செ.மீ., திருச்செந்தூா் – 10 செ.மீ., வேதாரண்யம், சீா்காழி – 9 செ.மீ., ராமேஸ்வரம் – 8 செ.மீ., கடலூா், பாம்பன், ஜெயங்கொண்டம், புதுச்சேரி, திருமனூா், மயிலாடுதுரை உள்ளிட்ட பகுதிகளில் தலா 7 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.

மேலும் மன்னாா்குடி, செய்யாறு, நன்னிலம், காலரைக்காலில் தலா 6 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.

அடுத்த செய்தி