ஆப்நகரம்

பட்டினப்பாக்கத்தில் இரண்டாவது நாளாக கடல் சீற்றம்: 50 வீடுகள் நாசம்

சென்னை பட்டினப்பாக்கத்தில் நேற்று இரண்டாவது நாளாக ஏற்பட்ட கடல் சீற்றத்தால் மேலும் 50 வீடுகள் சேதமடைந்து பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

Samayam Tamil 28 Jun 2018, 9:35 am
சென்னை பட்டினப்பாக்கத்தில் நேற்று இரண்டாவது நாளாக ஏற்பட்ட கடல் சீற்றத்தால் மேலும் 50 வீடுகள் சேதமடைந்து பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
Samayam Tamil chennai pattinapakam


சென்னை பட்டினப்பாக்கம் பகுதியில் உள்ள சீனிவாசபுரத்தில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. தொடா் சீற்றத்தால் 35 வீடுகள் இடிந்து விழுந்தது. இதனால் மக்கள் தங்கள் வீடுகளில் வைத்திருந்த பணம், நகை, சான்றிதழ்கள் கடலில் அழித்துச் செல்லப்பட்டது. அந்த பகுதியில் மொத்தம் 500க்கும் மேற்பட்ட மீனவக்குடியிருப்புகுள் உள்ளன.

செவ்வாயன்று ஏற்பட்ட கடல் சீற்றத்தால் 35 வீடுகள் இடிந்து விழுந்ததாக கூறப்பட்ட நிலையில், இரண்டாவது நாளாக நேற்றும் சீற்றம் தணியவில்லை. இதன் காரணமாக மேலும் 50 வீடுகள் சேதமடைந்தது. இருக்க இடம் இல்லாமல், தற்போது சொந்த ஊரிலே பட்டின்பாக்கம் மக்கள் அகதிகளாகி உள்ளனர். இதுவரை அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியள்ளனர். இதனிடையே மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல், மய்யம் விசில் ஆப் மூலமாக வந்த புகாரின் அடிப்படையில் பட்டினப்பாக்கம் சென்று பார்த்ததாக செய்திகள் வந்துள்ளது.

அடுத்த செய்தி