ஆப்நகரம்

சென்னை சாலையில் ஏற்பட்ட பள்ளம் மூடப்பட்டது

சென்னையில் திடீரென சாலையில் ஏற்பட்ட பள்ளம் சிமென்ட் கலவை கொண்டு மூடப்பட்டது.

TNN 6 May 2017, 10:11 am
சென்னை: சென்னையில் திடீரென சாலையில் ஏற்பட்ட பள்ளம் சிமென்ட் கலவை கொண்டு மூடப்பட்டது.
Samayam Tamil chennai road cave closed with cement
சென்னை சாலையில் ஏற்பட்ட பள்ளம் மூடப்பட்டது


சென்னை கீழ்பாக்கம் டெய்லர்ஸ் சாலை சந்திப்பில் திடீரென 6 அடி அகலத்தில் 10 அடி ஆழத்தில் பள்ளம் ஏற்பட்டது. மெட்ரோ ரயில் பணி நடந்துவரும் இடத்தில் இந்த பள்ளம் ஏற்பட்டதால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

பள்ளம் ஏற்பட்டதையடுத்து, பணியாளர்களுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பணியாளர்கள் பள்ளத்தை அடைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், சென்னை டெய்லர்ஸ் சாலை சந்திப்பில் ஏற்பட்ட அந்த திடீர் பள்ளம் கான்க்ரீட் கலவை கொண்டு தற்போது மூடப்பட்டுள்ளது. சுமார் ஒன்றரை மணி நேரம் இந்த பணிகள் நடைபெற்றதாக தெரிகிறது.

சென்னையின் முக்கிய சாலையான, அண்ணா சாலையில் உள்ள ஜெமினி பாலம் அருகே கடந்த ஏப்ரல் மாதம் இதேபோன்று திடீர் பள்ளம் ஏற்பட்டு, பின்னர் சரி செய்யப்படட் நிலையில், டெய்லர்ஸ் சாலை சந்திப்பில் ஏற்பட்ட இந்த பள்ளம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
Chennai Road cave closed with cement

அடுத்த செய்தி