ஆப்நகரம்

இனி மின்சார ரயில்களில் இஷ்டம் போல பயணிக்கலாம்: கட்டுப்பாடுகள் தளர்வு

தெற்கு ரயில்வேயின் சென்னைப் பிரிவு புறநகர் ரயில்களில் பயணக் கட்டுப்பாடுகளை மேலும் தளர்த்தியுள்ளது.

Samayam Tamil 2 Sep 2021, 7:49 pm
மாணவர்கள் உட்பட அனைத்து வகை பயணிகளுக்கும் அனைத்து வகையான டிக்கெட்டுகளும் செப்டம்பர் 2 முதல் (இன்று) முதல் வழங்கப்படும் என்று தெற்கு ரயில்வேயின் சென்னைப் புறநகர் பிரிவு தெரிவித்துள்ளது.
Samayam Tamil file pic


அது தொடர்பாக வெளியான செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது, சென்னை மின்சார ரயில்களில் பீக் நேரங்களில் பயணம் செய்ய தடை விதிக்கப்பட்டிருந்த பொது பிரிவில் ஆண் பயணிகள் டிக்கெட் வாங்கும் போது ஏதேனும் அடையாள அட்டையுடன் இரண்டு டோஸ் கோவிட் தடுப்பூசி சான்றிதழை வழங்கினால் இப்போது பயணம் செய்ய அனுமதிக்கப்படுகிறது.

சீசன் டிக்கெட் உட்பட அனைத்து டிக்கெட்டுகளும் அவர்களுக்கு வழங்கப்படும். மேலும், தங்கள் பணியிடத்திலிருந்து அங்கீகார கடிதம்/ அடையாள அட்டை இல்லாத மற்றும் இரண்டு டோஸ் கோவிட் தடுப்பூசி சான்றிதழை டிக்கெட் கவுன்டர்களில் வழங்காத ஆண் பயணிகளுக்கு, பீக் நேரங்களில் பயணம் செய்வதற்கான கட்டுப்பாடு தொடரும்.


ஓபிஎஸ் மனைவி விஜயலட்சுமி மறைவு: இதை கவனித்தீர்களா?

மேலும், அவர்களுக்கு பீக் நேரம் தவிர்த்து மற்றும் நேரங்களில் அவர்களுக்கு ஒற்றை பயண டிக்கெட்டு மட்டும் வழங்கப்படும். இந்த கட்டுப்பாடுகள் மாணவர்களுக்கு பொருந்தாது என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளதால் ரயில்களில் பயணிக்கும் மாணவர்களுக்கு நெறிமுறைகளை சென்னைபுறநகர் ரயில்வே போலீசார் வெளியிட்டுள்ளனர். அதை இந்த செய்தியில் இணைத்துள்ளோம்.

அடுத்த செய்தி