ஆப்நகரம்

அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு மீண்டும் அனுமதி: மா.சுப்பிரமணியன் சொன்ன தகவல்!

சென்னை ஸ்டான்லி, தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரிகள் செயல்படுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி இயங்குவதற்கான அனுமதி இன்னும் வழங்கப்படவில்லை.

Authored byமரிய தங்கராஜ் | Samayam Tamil 8 Jun 2023, 12:39 pm
சென்னை ஸ்டான்லி, திருச்சி, தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரிகள் இயங்குவதற்கான அனுமதியை ரத்து செய்து தேசிய மருத்துவ ஆணையம் உத்தரவிட்டிருந்தது. குறைகள் சரி செய்யப்பட்டதால் இரு மருத்துவக் கல்லூரிகள் இயங்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil ma subramanian


பயொமெட்ரிக் இயந்திரம், சிசிடிவி கேமராக்கள் உள்ளிட்ட ஒரு சில உட்கட்டமைப்பு வசதி குறைபாடுகளை சுட்டிக் காட்டி சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி, தருமபுரி மருத்துவக் கல்லூரி ஆகியவற்றின் மருத்துவ படிப்புகளுக்கான அங்கீகாரத்தை தேசிய மருத்துவ ஆணையத்தின் இளநிலை மருத்துவ கல்வி வாரியம் ரத்து செய்வதாக அறிவித்தது.

இந்த அறிவிப்பு பல்வேறு விமர்சனங்களை சந்தித்தது. இந்த விவகாரம் தொடர்பாக அமைச்சர் மா.சுப்பிரமணியன், “ஒன்றிய சுகாதாரத்துறை மற்றும் ஆயுஷ் அமைச்சர்களை சந்தித்து பேச உள்ளோம். தர்மபுரி, திருச்சி, ஸ்டான்லி ஆகிய மூன்று மருத்துவக் கல்லூரிகள் விவகாரத்தில் நல்ல முடிவு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மருத்துவ சேர்க்கைக்கான எந்த பாதிப்பும் ஏற்படாது” என்று கூறியிருந்தார்.
எடப்பாடியுடன் இணக்கமாகிறாரா சசிகலா? ஓபிஎஸ், தினகரனை கை கழுவ திட்டமா?
இந்நிலையில் சென்னை ஸ்டான்லி, தர்மபுரி மருத்துவக் கல்லூரிகள் தொடர்ந்து இயங்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. திருச்சி அரசு மருத்துவக் கல்லூரிக்கான அனுமதி ரத்து இன்னும் நீக்கப்படவில்லை. இந்த தகவலை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று (ஜூன் 8) கூறியுள்ளார்.
ஓய்வு பெறும் முன் இறையன்பு செய்த சம்பவம்: தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு சூப்பர் சான்ஸ்!
சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், “அனுமதியை ஏன் ரத்து செய்யக்கூடாது என்ற அறிக்கை திரும்பப் பெறப்பட்டது. மருத்துவக் கல்லூரிகள் மூடப்படுவதாக ஒரு மாயத் தோற்றம் உருவாக்கப்பட்டது. மருத்துவ கல்லூரிகளின் அங்கீகாரம் தொடர்பாக ஓரிரு நாள்களில் எழுத்துபூர்வமாக அறிக்கை வெளியாகும்” என்று அவர் கூறினார்.
எழுத்தாளர் பற்றி
மரிய தங்கராஜ்
காட்சி தொடர்பியல் துறை பட்டதாரி. சினிமா, அரசியல் சார்ந்து எழுதுவதில் பெரும் விருப்பம் கொண்டவர். டிஜிட்டல் ஊடகத்தில் ஆறு ஆண்டுகள் அனுபவம். தமிழ் சமயம் ஊடகத்தில் சீனியர் டிஜிட்டல் கண்டட் புரொடியூசராக அரசியல் சாந்த செய்திகள், கட்டுரைகளை கடந்த மூன்றாண்டுகளாக எழுதி வருகிறார்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி