ஆப்நகரம்

சென்னை: நியூ இயர் போக்குவரத்து மாற்றம், முழு ரிப்போர்ட் இதோ!

நியூ இயர் கொண்டாட்டங்களை பாதுகாப்புடம் மேற்கொள்ளக் காவல் துறை சென்னையில் பல்வேறு போக்குவரத்து மாற்றங்களைச் செய்துள்ளது. போக்குவரத்து மாற்றம் தொடர்பான முழு செய்தித் தொகுப்பு...

Samayam Tamil 31 Dec 2019, 10:50 am
சென்னை மொத்தமும் ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாட்டத்திற்குத் தயாராகி விட்டது. கோயில்கள், கடற்கரை, பூங்காக்கள், பார்கள், ஹோட்டல்கள் என அனைத்து இடங்களிலும் அலங்கார விளக்குகள் தொங்க விடப்பட்டுள்ளன.
Samayam Tamil images (29)


“12 மணிக்கு எந்த கடற்கரை செல்லலாம்”, “டிஜே பார்ட்டி போகலாமா இந்த வருஷம்?”, “பிரைவேட் பார் எத்தனை மணி வரை” என நம் மனதில் தோன்றிய அனைத்து கேள்விகளுக்கும் பதில்களைப் பெற்றிருப்போம். இந்த பதில்களுக்கு இடையில், சென்னை போக்குவரத்தில் சில மாற்றங்களைப் போக்குவரத்து காவல் துறை செய்துள்ளது என்பதை மறந்துவிடக் கூடாது.

குறிப்பாக மெரினா, பெசண்ட் நகர் கடற்கரை செல்லவதற்கோ அல்லது இசிஆர் செல்ல திட்டமிட்டிருக்கிறீர் என்றால் இந்த அறிவிப்பு உங்களுக்கானதுதான்.

நியூ இயர் கொண்டாட்டமா? குடைய மறந்திறாதீங்க!

மாநகர் காவல் துறை சில இடங்களில் போக்குவரத்தில் சில மாற்றங்களைச் செய்தும், வாகனங்களை நிறுத்த சில இடங்களை ஒதுக்கியும் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி செவ்வாய்க் கிழமை நாம் மனதில் வைத்துக் கொள்ள வேண்டிய 5 விஷயங்கள்:

* மெரினா கடற்கரை பகுதியை ஒட்டியுள்ள காமராஜர் சாலை முழுவதும் போக்குவரத்து துண்டிக்கப்படுகிறது. போர் நினைவிடம் முதல் லைட் ஹவுஸ் வரை எந்த வாகனங்களும் அனுமதிக்கப்படாது.

* மாலை 4 மணிக்கு மேல் காமராஜர் சாலையுடன் இணையும் சாலைகள் வரை மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்

* மெரினா கடற்கரைக்குள் செல்பவர்களுக்கு சேப்பாக்கம், லாய்ட்ஸ் சாலை, குயின் மேரீஸ் கல்லூரி மைதானம், பெசண்ட் சாலை, சுவாமி சிவானந்தா சாலை பகுதிகளில் தங்கள் வாகனங்களை நிறுத்தி விட்டுச் செல்ல அறிவுறுத்தப் படுகிறார்கள்.

* பெசண்ட் நகரில் 2வது, 5வது அவென்யூ சாலைகளில் மக்கள் தங்கள் வாகனங்களை நிறுத்திக் கொள்ளலாம்.

Kamal Hassan: சூப்பர் ஸ்டார், உலக நாயகனின் அரசியல் விளையாட்டுகள் 2019

* குடித்து விட்டு வாகனம் ஓட்டி காவல் துறை கையில் சிக்கினாள், லைசன்ஸ் பரிமுதல் செய்யப்பட்டு, ரத்து செய்யப்படும். சம்பந்தப்பட்டவர்கள் வெளிநாடுகளுக்குச் செல்ல முடியாத வகையில் குறித்து வைக்கப்படுவார்கள்.

இவ்வாறு காவல் துறை வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி