ஆப்நகரம்

அதிக கட்டணம் கேட்ட ஆத்திரத்தில் மாநகர பேருந்தை அடித்து நொறுக்கிய பயணி

சென்னை மாநகரப் பேருந்தில் பயணச்சீட்டுக்கான கட்டணம் அதிகமாக வசூலிக்கப்படுவதாக கூறி, ஆத்திரமடைந்து பேருந்து கண்ணாடியை உடைத்த பயணி போலீஸிடம் ஒப்படைக்கப்பட்டார்

Samayam Tamil 3 Mar 2019, 9:05 am
சென்னை மாநகரப் பேருந்தில் பயணச்சீட்டுக்கான கட்டணம் அதிகமாக வசூலிக்கப்படுவதாக கூறி, ஆத்திரமடைந்து பேருந்து கண்ணாடியை உடைத்த பயணி போலீஸிடம் ஒப்படைக்கப்பட்டார்.
Samayam Tamil மாநகரப் பேருந்து கண்ணாடி உடைப்பு- பயணியை பிடித்து போலீசில் ஒப்படைத்த நடத்துநர்


பிராட்வேயில் இருந்து திருவொற்றியர் செல்லும் 56C மாநகரப் பேருந்தில் சுங்கச்சாவடி நிறுத்தத்தில் நின்றது. அப்போது அங்கு ஏறிய பயணி ஒருவர் ரூ. 5 கொடுத்து ராஜாக்கடை நிறுத்தம் செல்வதற்கு பயணச்சீட்டு கேட்டுள்ளார்.

அதற்கு நடத்துநர் ரூ. 7 கேட்டுள்ளார். அப்போது அதிர்ந்து போன பயணி, எதற்காக கூடுதல் கட்டணம் என்று கேட்டுள்ளார். அதை தொடர்ந்து நடத்துநருக்கும், பயணிக்குமிடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதனால் பயணியை நடத்துநர் பேருந்திலிருந்து கீழே இறக்கிவிட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பயணி பேருந்து முன்பே சென்று கல்லை எடுத்து வீசி கண்ணாடியை உடைத்துவிட்டு ஓடிவிட்டார்.

உடனே ஓட்டுநரும், நடத்துரும் துரத்திச்சென்று பயணியை பிடித்தனர். பிறகு அவருக்கு தர்ம அடி கொடுத்து திருவொற்றியூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவரை பிடித்த விசாரித்த போது பயணியின் பெயர் தங்கராஜ் என்று தெரியவந்தது. இதனால் சிறிது நேரம் சுங்கச்சாவடி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

அடுத்த செய்தி