ஆப்நகரம்

சென்னையில் அடுத்த 24 மணி நேரத்தில் அதி கன மழை!! 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!!

சென்னை உள்பட தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் மிக கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

TOI Contributor 30 Oct 2017, 1:08 pm
தென்மேற்கு வங்கக் கடலில் இலங்கை அருகே மையம் கொண்டு இருந்த வளி மண்டல மேலடுக்கு சுழற்சி அதே இடத்தில் மையம் கொண்டு இருப்பதால் சென்னை உள்பட தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் மிக கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil chennai will receive heavy rain in next 24 hours say chennai imd officer balachandran
சென்னையில் அடுத்த 24 மணி நேரத்தில் அதி கன மழை!! 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!!


இதுகுறித்து இன்று காலை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் கூறுகையில், ''தென்மேற்கு வங்கக் கடலில் இலங்கை அருகே மையம் கொண்டு இருந்த வளி மண்டல மேலடுக்கு சுழற்சி அதே இடத்தில் மையம் கொண்டுள்ளது. இதன் காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கன மழை முதல் மிக கன மழை பெய்யும். உள்மாவட்டங்களில் மிதமான முதல் கன மழை பெய்யும்.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், செங்கல்பட்டு, கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் கன மழை முதல் மிக கன மழை பெய்யும். புதுவையிலும் கன மழை இருக்கும்.

ஆனைக்காரன் சத்திரத்தில் அதிகளவில் இன்று காலை வரை 9 செ.மீ., மழையும், சீர்காழி, நாகப்பட்டினம் 6 செ.மீ., மழையும், சென்னை, காஞ்சிபுரம் 5 செ.மீ., மழையும், திருத்தணி, செங்கல்பட்டு 4 செ.மீ., மழையும், ரெட் ஹில்ஸ், சிதம்பரம், தாம்பரம், கடலூர் ஆகிய இடங்களில் 3 செ. மீ மழையும் பதிவாகியுள்ளது'' என்று தெரிவித்தார்.

இதற்கிடையே வரும் 3ஆம் தேதி வரை தமிழகம், ஆந்திரா, கேரளா ஆகிய மாநிலங்களில் பலத்த மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையமும் எச்சரித்துள்ளது.

Chennai will receive heavy rain in next 24 hours say Chennai IMD officer Balachandran

அடுத்த செய்தி