ஆப்நகரம்

சிதம்பரத்திற்கு காங்கிரஸ் தலைமை கிடைக்குமா?

முன்னாள் நிதியமைச்சர் எனும் பெரிய பொறுப்பில் இருந்த பா. சிதம்பரத்திற்கு தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பொறுப்பு கிடைக்கும் என தெரிகிறது.

TOI Contributor 27 Jul 2016, 2:55 pm
சென்னை : முன்னாள் நிதியமைச்சர் எனும் பெரிய பொறுப்பில் இருந்த பா. சிதம்பரத்திற்கு தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பொறுப்பு கிடைக்கும் என தெரிகிறது.
Samayam Tamil chidambaram likely to be made tncc chief
சிதம்பரத்திற்கு காங்கிரஸ் தலைமை கிடைக்குமா?


தமிழக காங்கிரஸில் பல்வேறு உட்கட்சி பூசல் இருப்பதாகவும், தலைமை சரியில்லை, தமிழக சட்டமன்ற தேர்தலில் குறைந்த அளவு வெற்றி என பல்வேறு பிரச்னைகள் தொடர்ந்ததால், கட்சியை தலைமை ஏற்று நடத்திய ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் கடந்த மாதம் ராஜினாமா செய்து கட்சி மேலிடத்திற்கு கடிதம் அனுப்பினார். கட்சியின் மேலிடம் எந்த ஒரு விளக்கமும் கேட்கமல் ராஜினாமா கடிதத்தை ஏற்றதோடு, விரைவில் புதிய தமிழக காங்கிரஸ் தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார் என கூறியது.

இந்நிலையில் இளங்கோவன் ராஜினாமா செய்து ஒரு மாதத்திற்கு மேல் ஆகியும் இன்னும் புதிய தலைவரை தேர்ந்தெடுக்க எந்த ஒரு முயற்சியும் கட்சி தலைமை எடுக்கவில்லை. வரும் 2019ல் நடக்க உள்ள லோக் சபா தேர்தல் நடக்க உள்ள நிலையில், தற்போது தேர்ந்தெடுக்கும் தமிழக காங்கிரஸ் தலைவர் சிறப்பாக வழிநடத்தும் பட்சத்தில், சிறப்பான வெற்றியை பெற வழிவகுக்கும் என முன்னாள் நிதிஅமைச்சர் பா. சிதம்பரம் கூறியுள்ளார்.

பல காங்கிரஸ் தொண்டர்கள் பா. சிதம்பரம் கட்சிக்கு தலைமை தாங்க வேண்டும் என கூறிவரும் நிலையில், தன்னை தேர்ந்தெடுக்கும் பட்சத்தில் எனது சில நிபந்தனைகளுக்கு கட்சி உறுப்பினர்கள் கட்டுப்பட வேண்டும் என சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி