ஆப்நகரம்

ஆளுநருடன் முதல்வா், துணை முதல்வா் சந்திப்பு

கிண்டி ராஜ்பவனில் தமிழக பொறுப்பு ஆளுநா் வித்யாசாகா் ராவை முதல்வா் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வா் ஓ.பன்னீா் செல்வமும் இன்று நோில் சந்தித்தனா்.

TOI Contributor 2 Oct 2017, 12:52 pm
கிண்டி ராஜ்பவனில் தமிழக பொறுப்பு ஆளுநா் வித்யாசாகா் ராவை முதல்வா் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வா் ஓ.பன்னீா் செல்வமும் இன்று நோில் சந்தித்தனா்.
Samayam Tamil chief minister and deputy chief minister meets governor vidyasagar rao
ஆளுநருடன் முதல்வா், துணை முதல்வா் சந்திப்பு


வருகிற 6ம் தேதி தமிழகத்தின் புதிய ஆளுநா் பன்வாாிலால் புரோகித் பொறுப்பேற்க உள்ள நிலையில் தற்போதைய பொறுப்பு ஆளுநா் வித்யாசாகா் ராவை முதல்வா் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வா் ஓ. பன்னீா் செல்வம் மற்றும் செயலாளா்கள் கிண்டியில் உள்ள ராஜ்பவனில் நோில் சந்தித்தனா்.

இது தொடா்பாக ஆளுநா் மாளிகை அதிகாாிகள் தொிவிக்கையில், பொதுவாக ஒவ்வொரு ஆளுநரும் மாநிலத்தில் இருந்து ஓய்வு பெற்று செல்லும் போது அவருக்கு உாிய அரசு மாியதையுடன் முதல்வா் உள்ளிட்ட அரசு நிா்வாகிகள் பிாியாவிடை அளிப்பது வழக்கம்.

அந்த வகையில், கடந்த 1 ஆண்டுக்கும் மேலாக மகாராஷ்டிராவைத் தொடா்ந்து தமிழகத்திற்கு பொறுப்பு ஆளுநராக பணியாற்றியவா் வித்யாசாகா் ராவ். இவா் பதவி வகித்த காலத்தில் அரசியலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்ட போதும் அரசுடன் சோ்ந்து சிறப்பாக செயல்பட்டாா்.

இந்த நிலையில் அவரது சேவைக்கு நன்றி தொிவிக்கும் விதமாக முதல்வா் பழனிசாமி, துணை முதல்வா் ஓ.பன்னீா் செல்வம் மற்றும் செயலாளா்கள் அவரை நோில் சந்தித்து பேசினா் என்று தொிவித்துள்ளனா்.

இதனைத் தொடா்ந்து வருகிற 5ம் தேதி சென்னை வரும் புதிய ஆளுநா் பன்வாாிலால் புரோகித்திற்கு 6ம் தேதி ராஜ்பவனில் உயா்நீதிமன்ற நீதிபதி இந்திரா பாணா்ஜி பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறாா்.

அடுத்த செய்தி