ஆப்நகரம்

டெல்லி வழக்கறிஞர் கூட்டத்தில் முதல்வர் எடுத்த அதிரடி முடிவு!!

காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாக, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தமிழக அரசின் வழக்கறிஞர்கள் குழுவுடன், டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் ஆலோசனை நடத்தினார்.

Samayam Tamil 2 May 2018, 4:38 pm
காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாக, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தமிழக அரசின் வழக்கறிஞர்கள் குழுவுடன், டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் ஆலோசனை நடத்தினார்.
Samayam Tamil டெல்லி வழக்கறிஞர் கூட்டத்தில் முதல்வர் எடுத்த அதிரடி முடிவு!!
டெல்லி வழக்கறிஞர் கூட்டத்தில் முதல்வர் எடுத்த அதிரடி முடிவு!!


டெல்லியில் நடைபெற உள்ள முதல்வர்கள் மாநாட்டில் பங்கேற்க, டெல்லி சென்றுள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அதிமுக எம்பிக்கள் சிறப்பான வரவேற்பளித்தனர். இதைத் தொடர்ந்து குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெறும் முதல்வர்கள் மாநாட்டில் கலந்துகொள்ள உள்ளார்.

இதற்கு முன்னதாக, டெல்லியில் உள்ள தமிழக வழக்கறிஞர்கள் குழுவுடன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில், காவிரி விவகாரம் குறித்தும், இரட்டை இலை வழக்கு குறித்தும் தீவிர ஆலோசனை நடத்தப்பட்டது.

இதில், காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றமே இறுதி முடிவு எடுக்க முடியும் எனவும், இரட்டை இலை வழக்கு விசாரணையை மே இறுதிக்குள் டெல்லி உயர்நீதிமன்றம் முடிப்பதற்கு வாய்ப்புள்ளதாகவும் தமிழக வழக்கறிஞர்கள் விளக்கம் அளித்தனர்

மேலும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு கால அவகாசம் கோரினால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்க தமிழக அரசு முடிவு எடுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக, பிரதமர் மோடியைச் சந்திக்க நேரம் கோரிய, தமிழக முதல்வரின் கோரிக்கை இதுவரை பரிசீலிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி