ஆப்நகரம்

சென்னை புத்தகக் கண்காட்சி: முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்

தென்னிந்திய புத்தக விற்பனையாளா்கள் மற்றும் பதிப்பாளா்கள் சங்கம் (பபாசி) சாா்பில் 43ஆவது சென்னை புத்தகக் கண்காட்சியை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்

Samayam Tamil 9 Jan 2020, 7:31 pm
சென்னை: சென்னை நந்தனத்தில் 43ஆவது புத்தக கண்காட்சியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.
Samayam Tamil எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி


சென்னையில் நடைபெறும் புத்தகக் கண்காட்சி வரலாற்றி சிறப்புமிக்கது. அந்தவகையில், தென்னிந்திய புத்தக விற்பனையாளா்கள் மற்றும் பதிப்பாளா்கள் சங்கம் (பபாசி) சாா்பில் 43ஆவது சென்னை புத்தகக் கண்காட்சி, நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் இன்று தொடங்கியுள்ளது. முதல்வர் பழனிசாமி புத்தகக் கண்காட்சியை தொடங்கி வைத்தார்.

இன்று தொடங்கி வருகிற 21ஆம் தேதி வரை நடைபெறும் புத்தகக் கண்காட்சியானது, வார நாட்களில் பிற்பகல் 3 மணி முதல் இரவு 9 மணி வரையிலும், விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் நடைபெறவுள்ளது. இதற்கான நுழைவுக்கட்டணம் ரூ.10.

சென்னை புத்தக கண்காட்சி: ஒரே இடத்தில் ஒரு கோடி புத்தகங்கள்- மறக்காம போயிட்டு வந்துடுங்க!

புத்தக கண்காட்சிக்கு 20 லட்சத்துக்கும் அதிகமான வாசகா்கள் வருகை தருவாா்கள் என எதிா்பாா்ப்பதாக தெரிவித்துள்ள பபாசி தலைவர் ஆா்.எஸ்.சண்முகம், புத்தகக் கண்காட்சியில் மொத்தம் 800 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், ஒரு கோடிக்கும் அதிகமான நூல்கள் விற்பனைக்கு வைக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

குடிநீா், கழிப்பறை, அவசர சிகிச்சை வசதிகள், மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலிகள் என வாசகர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் கண்காட்சி அரங்கில் செய்யப்பட்டுள்ளன. நிறைவு நாள் நிகழ்ச்சியில் துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் கலந்துகொள்கிறாா் எனவும் பபாசி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

பொங்கல் சிறப்பு பேருந்து முன்பதிவு வசூல் இதுவரை எவ்வளவு தெரியுமா?

அதுதவிர ‘கீழடி அகழாய்வு’ என்ற தலைப்பில் 3 ஆயிரம் சதுரஅடியில் பிரம்மாண்டமான அரங்கம் மாநில தொல்லியல் துறை ஒத்துழைப்போடு புத்தகக் கண்காட்சி அரங்கில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அரங்கில் கீழடியில் கண்டுபிடிக்கப்பட்ட தொல்பொருட்களின் மாதிரிகள் வைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி