ஆப்நகரம்

திமுகவினருக்கு ஒரு கோடி டார்கெட்: வீடியோ கால் மூலம் அப்டேட் கேட்ட மு.க.ஸ்டாலின்

திமுக தொகுதி பார்வையாளர்களுடன் முதல்வர் ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார்.

Authored byமரிய தங்கராஜ் | Samayam Tamil 15 Apr 2023, 4:45 pm
திமுகவில் ஜூன் மாதத்துக்குள் புதிதாக ஒரு கோடி உறுப்பினர்களை கட்சியில் இணைக்க வேண்டும் என்று தொண்டர்கள், நிர்வாகிகளுக்கு அக்கட்சி தலைமை அறிவுறுத்தியுள்ளது.
Samayam Tamil mk stalin dmk


கலைஞர் பிறந்தநாளான ஜூன் 3ஆம் தேதிக்குள் இந்த இலக்கை எட்ட அறிவுறுத்தப்பட்டுள்ளது. 234 தொகுதிகளில் ஒவ்வொரு தொகுதியிலும் 50 ஆயிரம் புதிய உறுப்பினர்களை சேர்ப்பதற்கான வியூகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் 234 தொகுதிகளுக்கும் புதிதாக பார்வையாளர்கள் நியமிக்கபட்டுள்ளனர்.

இளைஞர் அணி, மாணவர் அணி உள்ளிட்ட திமுகவில் உள்ள பல்வேறு அணிகளை சேர்ந்த நிர்வாகிகள் தொகுதி பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
தமிழிலும் சி.ஏ.பி.எப். தேர்வு: அமித்ஷா காட்டிய க்ரீன் சிக்னல்: ஸ்டாலின் வரவேற்பு!
இந்த பார்வையாளர்களிடம் முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் முகாம் அலுவலகத்திலிருந்து காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார்.

உறுப்பினர் சேர்க்கை எந்தளவு நடந்துள்ளது என்பது குறித்து தொகுதி பார்வையாளர்களிடம் ஸ்டாலின் விசாரித்தார். அதிகளவில் புதிய உறுப்பினர்களை சேர்ப்பதற்கு பொதுமக்களை எவ்வாறு அணுகுவது என்பது குறித்து விவாதிக்கப்பட்டது.
மக்களே, கொளுத்தி எடுக்கப் போகும் வெயில்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
அப்போது பேசிய அவர், “வரும் மக்களவைத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றிபெற வேண்டும். அது தான் நமது இலக்கு. அதன் அடிப்படையில் உங்கள் பணிகள் இருக்க வேண்டும். உங்கள் பகுதிகளில் புதிய உறுப்பினர்களை சேர்க்கும் போது அரசின் திட்டங்கள், பணிகள் குறித்து எடுத்து சொல்ல ஏற்பாடு செய்ய வேண்டும்.

நீங்கள் தொகுதி பார்வையாளர்களாக பணியாற்றிக் கொண்டிருக்கிறீர்கள். இதனால் தொகுதிப் பிரச்சினை குறித்தும் நீங்கள் எனது கவனத்துக்கு கொண்டு வரலாம். இது தொடர்பாக உங்கள் கருத்துக்களையும் தெரிவிக்கலாம்” என்று அவர் பேசினார்.
எழுத்தாளர் பற்றி
மரிய தங்கராஜ்
காட்சி தொடர்பியல் துறை பட்டதாரி. சினிமா, அரசியல் சார்ந்து எழுதுவதில் பெரும் விருப்பம் கொண்டவர். டிஜிட்டல் ஊடகத்தில் ஆறு ஆண்டுகள் அனுபவம். தமிழ் சமயம் ஊடகத்தில் சீனியர் டிஜிட்டல் கண்டட் புரொடியூசராக அரசியல் சாந்த செய்திகள், கட்டுரைகளை கடந்த மூன்றாண்டுகளாக எழுதி வருகிறார்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி