ஆப்நகரம்

ஒருத்தருக்கு மட்டும் தமிழ் நாட்டோட வளர்ச்சி தெரியவே இல்ல... ஆளுநரை மறைமுகமாக விமர்சித்த ஸ்டாலின்!

தமிழ் நாட்டின் வளர்ச்சி ஒருவருக்கு மட்டும் தெரியவில்லை என ஆளுநர் ஆர்என் ரவியை மறைமுகமாக விமர்சித்துள்ளார் முதல்வர் முக ஸ்டாலின். 500 நகர்ப்புற நலவாழ்வு மையங்களை தொடங்கி வைத்த ஸ்டாலின் இவ்வாறு பேசியுள்ளார்.

Authored byபஹன்யா ராமமூர்த்தி | Samayam Tamil 7 Jun 2023, 10:07 am
Samayam Tamil MK Stalin

மாநகராட்சிகள் மற்றும் நகராட்சி பகுதிகளில் 125 கோடி ரூபாய் செலவில் 500 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மையங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று காணொலி வாயிலாக திறந்து வைத்தார். அப்போது பேசிய அவர் கல்வி, மருத்துவம் ஆகிய இரண்டையும் திராவிட மாடல் அரசு, இரண்டு கண்களாக நினைத்து போற்றி வருவதாக குறிப்பிட்டார்.

மேலும் கல்வி மற்றும் மக்கள் நலனில் தமிழக அரசு சிறந்து விளங்குவதாகவும் ஆனால் தமிழ் நாட்டின் வளர்ச்சி, மாநிலத்திலேயே மிக பெரிய பொறுப்பில் இருக்கக்கூடிய ஒருவருக்கு மட்டும் புலப்படவில்லை என்றும் கூறினார். திராவிட மாடல் ஆட்சியை ஏற்றுக்கொள்ளாத அவர் தனது கருத்துக்களை எல்லாம் விமர்சனங்களாக்கி தினந்தோறும் மக்களை குழப்பி வருகிறார் என்றும் ஆளுநர் ஆர்என் ரவியை மறைமுகமாக சாடினார் முதல்வர் ஸ்டாலின்.
பஸ்ல டிக்கெட் ரிசர்வ் பண்ணி போற நபரா நீங்க? உங்களுக்கான சூப்பர் அறிவிப்பு... இன்று முதல்!
தமிழ் நாட்டு மக்கள் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படமாட்டார்கள் என்ற ஸ்டாலின் தன்னை பொருத்தவரை அவர் தொடர்ந்து அப்படி சொல்லிக்கொண்டே இருக்கவேண்டும், அப்போதுதான் நமக்கு ஒரு எழுச்சி ஏற்படும் என்றும் கூறினார். நீலகிரியில் நடைபெற்ற துணைவேந்தர்களின் மாநாட்டில் பங்கேற்ற ஆளுநர் ஆர்என் ரவி முதலீட்டாளர்களை கவரக்கூடிய சூழலை நாம் உருவாக்க வேண்டும் என்றும் வெளிநாடு சென்றால் மட்டும் முதலீட்டாளர்கள் வந்துவிடமாட்டார்கள் என்றும் கூறியிருந்தார்.

முதல்வர் ஸ்டாலின் முதலீடுகளை ஈர்ப்பதற்காக வெளிநாடு சென்றிருந்த நிலையில் அதனை விமர்சிக்கும் வகையில் ஆளுநர் ஆர்என் ரவி இவ்வாறு பேசியிருந்தார். அவரது இந்த பேச்சுக்கு அமைச்சர்கள் பொன்முடி, தங்கம் தென்னரசு, மா சுப்பிரமணியன் உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். மதிமுக பொதுச் செயலாளர் வைகோவும் ஆளுநர் ஆர்என் ரவியை கடுமையாக விமர்சித்திருந்தார்.

ஒடிசா ரயில் விபத்தில் மின்சாரம் தாக்கி 40 பேர் பலி? அதிகாரிகள் தகவலால் அதிர்ச்சி!
மேலும் ஆளுநர் ஆர்என் ரவியின் இந்த கருத்துக்கு திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பலரும் கண்டனம் தெரிவித்தனர். ஆளுநர் ஆர்என் ரவி துணைவேந்தர்கள் மத்தியில் அரசியல் பேசுவதாக சாடியிருந்தார் அமைச்சர் தங்கம் தென்னரசு. ஆளுநரின் பேச்சுக்கு எந்த கருத்தும் தெரிவிக்காமல் இருந்து வந்தார். இந்நிலையில் நேற்றைய நிகழ்ச்சியில் ஆளுநரின் கருத்துக்கு முதல்வர் ஸ்டாலின் மறைமுகமாக பதிலடி கொடுத்துள்ளார்.
எழுத்தாளர் பற்றி
பஹன்யா ராமமூர்த்தி
செய்தி சேனல், எஃப் எம் (RJ) மற்றும் டிஜிட்டல் ஊடத்துறையில் 13 ஆண்டுகள் அனுபவம். இதழியலில் முதுகலைப்பட்டம் பெற்றுள்ளேன். பொது செய்திகள், அரசியல், க்ரைம், விளையாட்டு சினிமா மற்றும் உலக நடப்பு செய்திகளில் அனுபவம்.. தற்போது சமயம் தமிழில் சினிமா செய்திகளை அளித்து வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி