ஆப்நகரம்

இந்திய எல்லைக்குள் வந்த சீன கப்பலை விரட்டியது இந்திய கடலோர பாதுகாப்புபடை

இந்திய கடல் எல்லைப்பகுதியில் சீன கப்பல் ஒன்று நுழைய முயன்றத்தை, இந்திய கடலோர பாதுகப்புப் படையினர் விரட்டியடித்துள்ளனர்.

TNN 6 May 2017, 11:26 am
இந்திய கடல் எல்லைப்பகுதியில் சீன கப்பல் ஒன்று நுழைய முயன்றத்தை, இந்திய கடலோர பாதுகப்புப் படையினர் தடுத்து விரட்டியடித்துள்ளனர்.
Samayam Tamil chinese ships in indian ocean region
இந்திய எல்லைக்குள் வந்த சீன கப்பலை விரட்டியது இந்திய கடலோர பாதுகாப்புபடை


இந்தியாவின் தென் கிழக்கு பகுதியில் உள்ள கடல் எல்லையான தமிழக கடல் எல்லைப்பகுதியில், சீனாவின் கப்பல் ஒன்று நுழைய முயன்றுள்ளது.

பொதுவாக ஒரு நாட்டு கடல் எல்லையில் வேறொரு நாட்டு கப்பல் நுழைய வேண்டுமெனில், அந்நாட்டின் அனுமதி பெற வேண்டும். அல்லது கடலோர காவல்படையினரின் அனுமதியேனும் பெற வேண்டும். அப்படி எந்த அனுமயும் இல்லாமல் நுழையும் கப்பல்களை அந்நாட்டின் கடலோர பாதுகாப்பு படை விரட்டியடிக்கும்.

இந்த வகையில் அனுமதியின்றி நுழைந்த சீன கப்பலை இந்திய கடலோர காவல்படையினர் விரட்டியடித்துள்ளனர்.

இந்திய பாதுகாப்பு படையினருக்கும், சீன கப்பலுக்கும் இடையே துப்பாக்கி சூடு சம்பவம் நிகழ்ந்ததாகவும் கூறப்படுகிறது. இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியிடப்படவில்லை என்றாலும். இந்த சம்பவம் நடந்தது உறுதியானது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

அடுத்த செய்தி