ஆப்நகரம்

ஆகஸ்ட் 1 முதல் திரையரங்குகள் மீண்டு்ம் திறப்பு?

தமிழகம் முழுவதும் மூடப்பட்டுள்ள திரையரங்குகள் ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் மீண்டும் திறக்கப்பட வாய்ப்புள்ளதாக திரையரங்கு உரிமையாளர் சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Samayam Tamil 16 Jul 2020, 6:29 pm
முன்னச்சரிக்கை நடவடிக்கைகளுடன் திரையரங்குகளை திறக்க தயார் நிலையில் இருப்பதாகவும் திரையரங்கு உரிமையாளர் சங்க நிர்வாகிகள் கூறியுள்ளனர்.
Samayam Tamil theatre


கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக, சென்னை, கோவை. திருச்சி, மதுரை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த மார்ச் மாதம் 16 ஆம் தேதி முதல் திரையரங்குகள் தொடர்ந்து மூடப்பட்டுள்ளன.

இதன் விளைவாக புதிய படங்களை ரிலீஸ் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்தச் சிக்கலுக்கு தீர்வுகாணும் நோக்கில், ஜோதிகா நடித்த "பொன்மகள் வந்தாள்", "பென்குயின்" உள்ளிட்ட சில திரைப்படங்கள் ஓடிடி தொழில்நுட்பத்தில் ஆன்-லைனில் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளன.

ரஜினிகாந்த் சம்பந்திக்கு தமிழக பாஜகவில் பதவி!

மேலும், சின்னத்திரை நாடகங்களுக்கான படப்பிடிப்புக்கு தமிழக அரசு அண்மையில் அனுமதி அளித்தது. இந்த நிலையில், உரிய முன்னெச்சரி்க்கை நடவடிக்கைகளுடன் திரையரங்குகளை திறக்க திட்டமிட்டுள்ளதாக திரையரங்கு உரிமையாளர் சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

திரையரங்குகளில் வார இறுதி நாட்களில் மட்டும்தான் ஓரளவு ரசிகர்கள் கூ்ட்டம் வருவதுதான் பல ஆண்டுகளாக வழக்கமாக உள்ளன. ஆனால், தற்போதைய கொரோனா காலத்தில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை இன்னும் முழுமையாக திரும்பவில்லை. இதன் காரணமாக வார நாட்கள், வார இறுதி நாட்கள் என்று எவ்வித பாகுபாடுமின்றி எல்லா நாட்களும் ஒன்றாக இருப்பதாகவே பொதும்க்கள் தெரிவிக்கின்றனர்.

சினிமா: கொரோனாவுக்கு முன்னும், ஓடிடிக்கு பின்னும்

இதன் காரணமாக, நான்கு மாதங்களுக்கு பிறகு திரையரங்குகள் திறக்கப்படும்போது, கட்டுக்கடங்காமல் ரசிகர்கள் கூட்டம் வந்தால், திரையரங்க வளாகத்திலும், திரையரங்கிற்குள்ளும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க செய்வது திரையரங்க நிர்வாகிகளுக்கு கடும் சவாலான விஷயமாக இருக்கும்.

இதேபோன்று, கேண்டீன், கழிப்பறை உள்ளிட்ட இடங்களிலும் நோய்த்தொற்று பரவாத வகையில் சுகாதாரத்தை பராமரிப்பதும் சவாலான விஷயமே..

எனவே இவற்றை கருத்தில் கொண்டு, திரையரங்குகளில் உள்ள இருக்கைகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் அங்கு சமூக இடைவெளியை கடைபிடிக்கும் விதத்தில் ஒவ்வொரு காட்சிக்கு குறிப்பிட்ட எ்ண்ணிக்கையில் பார்வையாளர்களை அனுமதிக்கலாம் என்று யோசனை முன்வைக்க்ப்படுகிறது.

அடுத்த செய்தி