ஆப்நகரம்

ரேஷன் அட்டைகளில் மாற்றம்: மாதம் 1000 ரூபாய் திட்டமா? அதிகாரிகள் விளக்கம்!

ரேஷன் அட்டைகளில் பெண்களை குடும்பத் தலைவியாக மாற்ற வழங்கல் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

Samayam Tamil 9 May 2022, 9:02 am
குடும்பத் தலைவிக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டம் செயல்படுத்த உள்ளதாக ஒரு தகவல் பரவி வரும் நிலையில் அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர்.
Samayam Tamil tn ration cards


திமுகவின் தேர்தல் வாக்குறுதியில் இடம்பெற்ற குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் உரிமைத் தொகை எப்போது வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் நிலவி வருகிறது. நிதி நிலைமை சரியான பின்னர் வழங்கப்படும் என நிதியமைச்சர் சட்டமன்றத்தில் கூறியிருந்தாலும் இன்று அறிவிப்பு வெளியாகுமோ, நாளை வெளியாகுமோ என எதிர்பார்ப்புகள் குறைந்த பாடில்லை.

இந்நிலையில் மீண்டும் ஒரு முறை இந்த திட்டம் குறித்த தகவல் ஒன்று பரவி விவாதத்தை கிளப்பியுள்ளது. அந்தியோதயா அன்னயோஜனா, முன்னுரிமை (பிஎச்எச்) ஆகிய ரேஷன் அட்டைகளில் பெண்களை குடும்பத் தலைவியாக மாற்ற வழங்கல் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.
சசிகலாவை நோக்கி வருகிறதா அதிமுக? நிச்சயமா இது நடக்குமாம்!
இதற்காக இந்த இரு பிரிவு ரேஷன் அட்டைகளில் ஆண்கள் குடும்பத் தலைவராக இருந்தால், பெண்களை குடும்பத் தலைவியாக மாற்ற, சம்பந்தப்பட்டவரின் புகைப்படம், ரேஷன் கார்டு நகல், மனுவில் ரூ.5 கோர்ட் ஸ்டாம்ப் ஒட்டி சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலகத்தில் வழங்க அட்டைதாரர்களுக்கு தெரிவிக்க வேண்டுமென ரேஷன் கடை விற்பனையாளர்களுக்கு வழங்கல் துறை உத்தரவிட்டுள்ளது.
பாஜகவில் ஐக்கியமான திருச்சி சிவா மகன்: அண்ணாமலை முன் நடைபெற்ற நிகழ்வு!
குடும்பத் தலைவர் பெயர் மாற்றம் குறித்த அறிவிப்பு என்பதால் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கப் போகிறார்களோ என்ற தவறான தகவல் மக்களிடையே பரவியது. ஆனால் இதற்கும் குடும்பத் தலைவிக்கு மாதம் ரூ.1,000 திட்டத்துக்கும் சம்பந்தமில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அடுத்த செய்தி