ஆப்நகரம்

பெரும்பானமை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிட வேண்டும்-ஸ்டாலின்

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

TNN 5 Sep 2017, 4:42 pm
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர்
Samayam Tamil cm edapaadi pazhanichami has proves the majority stalin
பெரும்பானமை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிட வேண்டும்-ஸ்டாலின்

ஸ்டாலின் கூறியுள்ளார்.


ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு அதிமுக அணியில் அதிர்ச்சிகரமான சம்பவங்கள் நடந்து வருகின்றன. அதிமுகவின் இரு அணியின் இணைப்பு தமிழக அரசியலில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதனால் டிடிவி தினகரன் அணியைச் சேர்ந்த 19 எம்.எல்.ஏக்கள் முதல்வருக்கு அளித்த வாபஸை திரும்ப பெறுவதாக கூறி ஆளுநரிடம் எதிர்ப்பு கடிதம் கொடுத்தனர்.


இந்த நிலையில் இன்று நடந்த அதிமுகவின் அனைத்து எம்.எல்.ஏக்கள் கூட்ட்த்தில் முதல்வர் எடப்பாடிக்கு 109 எம்எல்ஏக்கள் ஆதரவு தெரிவித்தனர். இதனால் பழனிச்சாமி அரசு மீண்டும் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிட வேண்டும் என்று கூறினார். மேலும், ஆளுநர் காலதாமதம் செய்வது குதிரை பேரத்திற்கே வழிவகுக்கும் என்றும், எனவே இனியும் காலதாமதம் செய்யக்கூடாது என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Cm edapaadi pazhanichami has proves the majority-stalin

அடுத்த செய்தி