ஆப்நகரம்

ஆளுநரை சந்தித்த முதல்வர் பழனிசாமி

ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்தார் முதல்வர் பழனிசாமி. டிஜிபி நியமனம், தலைமைச்செயலாளர் நியமனம், 7பேர் விடுதலை விவகாரம் குறித்து ஆளுநருடன் முதல்வர் பேச வாய்ப்புள்ளது எனத் தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக அரசுக்கு உட்கட்சிப் பூசல்கள் அதிக அளவில் காணபடுகிறது. இது எங்கு போய் முடியும் என கட்சியின் ஆரம்பகால தொண்டர்கள் வேதனை அடைந்துள்ளனர்.

Samayam Tamil 12 Jun 2019, 5:58 pm
ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்தார் முதல்வர் பழனிசாமி. டிஜிபி நியமனம், தலைமைச்செயலாளர் நியமனம், 7பேர் விடுதலை விவகாரம் குறித்து ஆளுநருடன் முதல்வர் பேச வாய்ப்புள்ளது எனத் தகவல் வெளியாகியுள்ளது.
Samayam Tamil eps cm edappadi palanisamy


முன்னதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை ஆளுநர் பன்வாரிலால் சந்தித்தார். ஆளுனர் சென்னை திரும்பியது முதல்வர் பழனிசாமி ஆளுநரை சந்தித்துள்ளார்.

இந்த சந்திப்பு மிக முக்கியமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. ஏனென்றால் சசிகலா நன்நடத்தை அடிப்படையில் விடுதலை செய்யப்படுவதாக பரிசீலிக்கப்படுகிறது. இந்நிலையில் முதல்வர் பழனிசாமி ஆளுநரை சந்திப்பது பல கேள்விகளுக்கும் யூகங்களுக்கும் வழிவகுத்துள்ளது.

ஒருவேளை சசிகலா சிறையில் இருந்து வெளியாகினால் ஆட்சி சசிகலா கைக்கு மாறும் என கூறப்படுகிறது. மேலும் நடந்து முடிந்த கூட்டத்தில் சரியான தீர்மானங்கள் எட்டப்படவில்லை. தொண்டர்கள் அதிருப்தியில் உள்ளனர்.

கட்சிக்குள் நடக்கும் உள் விவகாரங்கள் குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை. மேலும் கூட்டத்தில் முடிவில் ஓபிஎஸ்-ஈபிஎஸ் பத்திரிகையாளர்களைச் சந்தித்து கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் குறித்துப் பேசுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர்கள் செய்தியாளர்களைச் சந்திக்காமல் கிளம்பியது ஏமாற்றத்தை அளித்துள்ளது. கட்சியின் 4 எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்தில் கலந்துகொள்ளாதது சிறு சலசலப்பை உண்டாக்கியது.

விரைவில் இடைத்தேர்தல் நடக்கவிருப்பதால் இக்கூட்டம் அதிமுகவுக்கு முக்கிய கூட்டமாக இருக்கும் என அனைத்து ஊடகங்களும் வரிசை கட்டி காத்திருந்தன. தொண்டர்கள் எண்ணிக்கையை காட்டிலும் செய்தியாளர்கள் எண்ணிக்கை அதிகம் இருக்கும் போல இருக்கிறதே என சில கமெண்டுகள் ஆங்காங்கே பறந்தன. கூட்டத்திற்கு முன்னர் ஜெயகுமார் சில விஷயங்களை கூற அயத்தமானார். ஆனால் அவர் பாதியில் கூட்டத்துக்குச் சென்றுவிட்டார்.
ஆகமொத்தம் அந்த கூட்டத்தில் உருப்படியாக எந்த தீர்மானமும் நிறைவேற்றப்படவில்லை என்பது தெளிவாகிறது. இது திமுகவுக்கு மகிழ்ச்சியளிக்கும் விதமாக அமைந்துள்ளது.

அதிமுக அரசுக்கு உட்கட்சிப் பூசல்கள் அதிக அளவில் காணபடுகிறது. இது எங்கு போய் முடியும் என கட்சியின் ஆரம்பகால தொண்டர்கள் வேதனை அடைந்துள்ளனர்.

அடுத்த செய்தி