ஆப்நகரம்

முதல்வர் பழனிசாமி திருப்பதியில் சாமி தரிசனம்: மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ வேண்டுதல்!

மக்கள் நலமுடன் வாழ வேண்டி திருப்பதி ஏழுமலையான் கோயிலில், முதல்வர் எடப்பாடி சாமி தரிசனம் செய்தார்.

Samayam Tamil 25 Sep 2018, 1:38 pm
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது குடும்பத்தாருடன் திருப்பதியில் இன்று சாமி தரிசனம் செய்தார்.
Samayam Tamil முதல்வர் பழனிசாமி திருப்பதியில் சாமி தரிசனம்: மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ வேண்டுதல்!
முதல்வர் பழனிசாமி திருப்பதியில் சாமி தரிசனம்: மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ வேண்டுதல்!


திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்வதற்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று மாலை குடும்பத்தினருடன் திருமலை சென்றார். இரவு 7 மணிக்கு வராக சாமி கோயிலிலும், ஹயக்ரீவர் கோயிலிலும் சாமி தரிசனம் செய்த அவர், இரவு திருமலையில் தங்கினார்.

இதனையடுத்து திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று அதிகாலையில் நடைபெற்ற வாராந்திர சேவையான அஷ்டதள பாத பத்ம ஆராதனை சேவையில் குடும்பத்தினருடன் பங்கேற்று சாமி தரிசனம் செய்த முதல்வர் பழனிசாமி, கோயிலுக்கு எதிரே உள்ள அகிலாண்டத்தில் தேங்காய் உடைத்தும், கற்பூரம் ஏற்றியும் வழிபாடு நடத்தினார்.

இதனைத்தொடர்ந்து திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் அவருக்கு சிறப்பு மரியாதை அளித்து, திருப்பதி ஏழுமலையானின் படத்தை பரிசாக அளித்தனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், உலக நன்மைக்காகவும் மக்கள் நலமுடனும் மகிழ்ச்சியுடனும் இருக்க வேண்டும் என வேண்டி கொண்டதாகத் தெரிவித்தார்.

இந்நிலையில் சேலத்தில், இன்று அதிமுக சார்பில் இலங்கையில் தமிழர் படுகொலைக்கு துணைபோன, திமுக - காங்கிரசைக் கண்டித்து, நடைபெற உள்ள கண்டனப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதல்வர் பழனிசாமி சேலம் புறப்பட்டு சென்றார்.

அடுத்த செய்தி