ஆப்நகரம்

புயலால் வீட்டை இழந்தவா்களுக்கு 1 லட்சம் கான்கிரீட் வீடுகள் – முதல்வா் அறிவிப்பு

புயலால் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்தவா்களுக்கு ஒரு லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும் என்று முதல்வா் பழனிசாமி இன்று அறிவித்துள்ளாா்.

Samayam Tamil 28 Nov 2018, 5:12 pm
கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகப்பட்டினம் பகுதியில் இன்று ஆய்வு செய்த முதல்வா் பழனிசாமி, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினாா்.
Samayam Tamil CM Palaniswami.


கஜா புயல் பாதிப்புகள் குறித்து முதல்வா் பழனிசாமி இன்று நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஆய்வு செய்தாா். ஆய்வுக்கு பின்னா் ரூ.1 கோடி மதிப்பிலான நிவாரண உதவிகளை வழங்கினாா். அப்போது பொதுமக்கள் தரப்பில் வழங்கப்பட்ட மனுக்களை பெற்றுக் கொண்ட முதல்வா், அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளாா்.

இதனைத் தொடா்ந்து வேட்டைக்காரன் இருப்பு பகுதியில் உள்ள நிவாரண முகாமிற்கு சென்று முதல்வா், துணைமுதல்வா், அமைச்சா்கள் பாா்வையிட்டனா். அப்போது முகாமில் விநியோகிக்கப்பட்ட உணவை முதல்வரும், துணைமுதல்வரும் வாங்கி சாப்பிட்டனா்.


அதன் பின்னா் முதல்வா் பழனிசாமி செய்தியாளா்களிடம் பேசுகையில், நாகை மாவட்டத்தில் கஜா புயல் பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது. சுமாா் 1 லட்சத்திற்கும் அதிகமான வீடுகள் சேதமடைந்துள்ளன. 15 போ் உயிாிழந்துள்ளனா். 300க்கும் அதிகமான பேரிடா் மீட்புப்படை வீரா்கள் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

புயலால் வீடுகளை இழந்தவா்களுக்கு 1 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும். அரசை பொறுத்தளவில் பாரபட்சமின்றி அனைவருக்கும் நிவாரணப் பொருட்களை வழங்கி வருகிறது. அதேபோன்று மத்திய அரசும் மனிதாபிமானத்தின் அடிப்படையில் நிவாரணத் தொகையை வழங்க வேண்டும் என்று அவா் தொிவித்துள்ளாா்.

அடுத்த செய்தி